Tirunelveli

News January 20, 2025

நெல்லை நீதிமன்றத்தில் 8 பேருக்கு இரட்டை ஆள் தண்டனை

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று காலை இந்த வழக்கிற்கு தீர்ப்பு கூறப்பட்டது.அதில் வாலிபரை கொலை செய்த 8 பேருக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

குழந்தைகளின் சமூக வலைத்தள  செயல்பாடுகளை கவனியுங்கள்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது மோசடி நடைபெற்று வருகின்றன. மேலும் தேவையில்லாத பதிவுகள் பதிவிடுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது .எனவே பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளின் சமூக வலைத்தள செயல்பாடுகளை கவனியுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 20, 2025

ஊத்து மலை கிராமம் இந்தியாவில் முதலிடம் 

image

ஜனவரி 1 முதல் இன்று வரை இந்தியாவிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் ஊத்து பகுதி 1022 மிமீ மழையை பெற்றிருக்கிறது. இம்மழை நாட்டிலேயே மிக அதிகம். ஊத்துக்கு அடுத்தபடியாக நாலுமுக்கு 912 மிமீ மழையும், காக்காச்சி 786 மிமீ மழையும் பெய்துள்ளது. மாஞ்சோலை இந்தியாவின் தனித்துவமிக்க இடமாக கருதப்படுகிறது. கடந்த 11 தினங்களாக இங்கு தொடர்ந்து மழை கொட்டுகிறது.

News January 20, 2025

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 

image

நெல்லை ஸ்ரீபுரத்தில் தேசிய தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 23ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். அதோடு இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

நெல்லை அருகே 823 ஆண்டு முந்தைய நகரம் கண்டுபிடிப்பு

image

கொண்டாநகரம் கிராமத்தில் உள்ள சிவன்கோவிலில் கல்வெட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகள் கோவிலில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அதில் இந்த ஊரை மையமாகக் கொண்டு 823 ஆண்டுகளுக்கு முன்பு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் ஒரு நகரம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை அவர்கள் நேற்று (ஜன.19) தெரிவித்தனர்.

News January 20, 2025

சிறிய குற்றச் செயலில் ஈடுபட்டால் கூட NOC கிடையாது – எஸ்பி

image

ஏர்வாடியில் காவல்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நாங்குநேரி வட்டார மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு திருவிழா நேற்று (ஜன.19) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட எஸ்பி, சிறிய குற்றச் செயலில் ஈடுபட்டு வழக்கு பதிந்திருந்தால் கூட வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்கும், அரசு வேலையில் சேர்வதற்கும் NOC வழங்கப்படாது என தெரிவித்தார்.

News January 20, 2025

பாளையங்கோட்டையில் இரட்டை கொலை – பயங்கரம்

image

ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர்-செல்வராணி தம்பதியின் மகள் ஜெனிபரை அதே ப​குதியைச் சேர்ந்த மரியகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஜெனிபர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.ஜெனிபர் வேறு ஒருவரை காதலித்து வந்ததாக சந்தேகப்பட்ட மரியகுமார் ஜெனிபரின் வீட்டிற்கு சென்று மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

News January 20, 2025

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 3 பேர் கைது

image

பாளையங்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ரஞ்சன் (42). இவர் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த மாதம் பீரோவில் இருந்து 1.50 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் மாயமாகியது. போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் வீட்டில் பணி புரிந்த அண்ணா நகரை சேர்ந்த சுஜிதா, கோட்டூரை சேர்ந்த ஆயிஷா, பீர் ஆகிய 3 பேரை கைது செய்து நேற்று (ஜன.19) சிறையில் அடைத்தனர்.

News January 19, 2025

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று (ஜன.19) கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

பாஜக புதிய மாவட்ட தலைவர் தேர்வு

image

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பலர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்துப் பலவேசம் என்பவர் நெல்லை வடக்கு மாவட்டத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

error: Content is protected !!