Tirunelveli

News March 6, 2026

நாங்குநேரி: கொலையானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி கொலை செய்தது. இதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று வீட்டில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அதேபோல் வட மாநில தொழிலாளி திரிநாத் கட்டாவின் குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்கினார்.

News March 6, 2026

நெல்லை: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.

News March 6, 2026

நாங்குநேரி சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதா? – திருமா

image

நெல்லை வருகை தந்த திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்:- நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா? என கண்டறிய வேண்டும். போதை பழக்கம் மட்டும்தான் காரணம் என்றாலும் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் பேட்டி அளித்தார்.

News March 6, 2026

நெல்லை காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கீழ், மாநகர பகுதிகளான நெல்லை டவுண், பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மருத்துவக்கல்லூரி, மேலப்பாளையம், பெருமாள்புரம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்களின் எல்லைகளில் இன்று (மார்ச்.5) இரவு ரோந்து பணி அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. திருநெல்வேலி டவுண் சரகம் உதவி ஆணையர் இளவரசன் ரோந்து பணிகளை மேற்பார்வையிடுவார்.

News March 6, 2026

நெல்லை இரவு காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச்.5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News March 5, 2026

நெல்லை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

நெல்லை மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 5, 2026

நெல்லை : அவசர சேவையை புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 5, 2026

நெல்லை : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

நெல்லை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

நாங்குநேரி சம்பவம் – போலீஸ் எஸ்பி எச்சரிக்கை

image

நெல்லை எஸ்பி பிரசன்னகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி கொலை சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டும் விதமாகவும், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் விஷமத்தனமான மற்றும் பிரச்சனைக்குரிய பதிவுகளை பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

News March 5, 2026

திருநெல்வேலி: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

திருநெல்வேலி மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <>க்ளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!