Tirunelveli

News January 21, 2025

வங்கி கொள்ளையில் இருவர் அம்பையில் ஆஜர்

image

மங்களூர் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் நெல்லை களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த முருகாண்டி கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஜோஸ்வா ஆகிய 2 பேரை மங்களூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் துப்பாக்கிகள் மற்றும் பணம் நகைகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அம்பை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 2 நபர்களையும் இன்று நீதிபதிக்கு முன்பாக போலீசார் ஆஜர்படுத்தினர்.

News January 21, 2025

கொலை வழக்கில் 7 பேர் குண்டாஸ்

image

நெல்லை மாவட்டம் கீழ்நத்தம் மேலூரைச் சேர்ந்த மாயாண்டி. என்பவர் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராக கடந்தாண்டு டிச.20 அன்று நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை ஓட, ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.

News January 21, 2025

நெல்லைக்கு வந்தே பாரத்தை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு

image

நெல்லையில் இயங்கும் வந்தே பாரத் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வந்தே பாரத் போல திருநெல்வேலியில் இருந்து கொல்கட்டா வரையும், சென்னை தாம்பரத்திலிருந்து கொல்கட்டு வரையும் இரண்டு புதிய அம்ரித் ரயில்கள் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை இந்திய பிரதமர் மோடி துவங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

News January 21, 2025

மேலும் 3 மாத காலம் ரயில் நீட்டிப்பு

image

கொச்சுவேலி – ஷாலிமார், திருநெல்வேலி – ஷாலிமார், தாம்பரம் – சந்திரகாசி, கோயம்புத்தூர் – பரௌனி ஆகிய சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் 3 மாதம் காலம் நீட்டிப்பு செய்து தெற்கு ரெயில்வே நேற்று (ஜன.20) அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 21, 2025

ரேஷன் குறைதீர் முகாம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகம் வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்பான பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

நெல்லையில் முதலமைச்சர் வருகையால் ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் நெல்லை வருகிறார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 78 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ வளாகத்தை தொடங்கி வைக்க உள்ளார் அதே நிகழ்ச்சியில் அரசு நலத்திட்டங்களையும் துவங்கி வைக்கிறார். இதற்காக அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மைதானம் சீரமைக்கப்படுகிறது.

News January 21, 2025

ரேசன் அட்டை சேவைக்கான சிறப்பு முகாம்; கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் 25ம் தேதி நடக்கும் குறைதீர் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்பட பல சேவையை பெறலாம் கூடுதல் தகவலுக்கு கட்டுப்பாட்டுஅறை எண்: 9342471314 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்.1967 மற்றும்18004255901 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்த சபாநாயகர்

image

ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்று வரும் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்களின் மாநாட்டில் இருந்து தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு இன்று வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் செயல்பாடு குறித்து மாநாட்டில் பேச முடியவில்லை என்றால் வேறு எங்கு பேசுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 20, 2025

நெல்லை கலெக்டர் தகவல்

image

பொதுவிநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் சனிக்கிழமையன்று (25.01.2025) குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று ( ஜன.20 ) தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

குடியரசு தின விழாவை முன்னிட்டு தீவிர வாகன சோதனை

image

நாட்டின் 76-வது குடியரசு தின விழா வருகிற ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் பாளை வ உ சி மைதானத்தில் வைத்து குடியரசு தின விழா நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைக்கிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.இன்று வாகன சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!