India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16845), வரும் 24, 27 ஆகிய தேதிகளில் கரூர் – செங்கோட்டை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 25, 28 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846), அதற்கு மாற்றாக கரூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முறையாக பண பலன்கள் வழங்க கோரியும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகல விலைப்படி வழங்க கோரியும் போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப கோரியும் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு பகுதியில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்ட விரோதமாக தாது மணல் தனிமங்களை எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ 3528 கோடி செலுத்த இன்று உத்தரவிடப்பட்டது. விவி மினரல்ஸ் மட்டும் அரசுக்கு ராயல்டி மற்றும் கனிம வள கட்டணமாக ரூ 2195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிறுவனம் மட்டும் 2002 -2014 வரை நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் டன் கனிமங்கள் சட்ட விரோதமாக எடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் இரு மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இதில் கோயிலுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி பணிக்கு செல்பவர்களும் அதிக அளவில் செல்கின்றனர். இந்த நிலையில், காலை 8.15 மணிக்கு திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் ரயில், புதிய அட்டவணைப்படி காலை 10.10 மணிக்கு புறப்படுகிறது. இதனால் நெல்லை வரை அலுவலகம் வருபவர்கள் சிரமப்படுவதால், பழைய அட்டவணைப்படி இயக்க கோரிக்கை.
நெல்லை ஷாலிமார் இடையே ரயில் சேவை நாளை 23ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், இந்த ரயில் சேவையை வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ஆம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த ரயில் வியாழன் தோறும் அதிகாலை 1:50 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படுகிறது. இதற்கு தற்போது முன்பதிவு நடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 6,7ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தந்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அப்போது ரூ.6,187.46 கோடியில் புதிய திட்டங்களையும் முடிவுற்ற திட்ட பணிகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.4000 கோடியில் டாடா சோலார் உற்பத்தி நிலையத்தையும் முதல்வர் துவங்கி வைக்க உள்ளதாக பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாயாண்டி என்பவர் கடந்த 19ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மற்றொரு குற்றவாளியான செல்லதுரையும் இன்று (ஜன.21) குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களான சங்கீதா, பொன்ராஜ், விஜி, ராஜேஷ், ராமேஸ்வரி, மாரியப்பன், ரசிதா, பொன்மணி, சுந்தரி, ஜெயலட்சுமி, கோமதி உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி இன்று (ஜன.21) வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை நேற்று நெல்லையில் கர்நாடக போலீசார் மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் இன்று போலீசார் நெல்லையில் இருந்து கைதிகளை அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கி தப்ப முயன்ற கண்ணன் மணி என்பவரை சுட்டுப்பிடித்துள்ளனர். இதில் மூன்று போலீசார் காயமடைந்துள்ளனர்.
தாமிரபரணியில் பறவைகள் கணக்கெடுப்பின் 15 ஆவது நிகழ்ச்சி மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையத்தில் வருகின்ற 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/J3mVGSbENUMwPqVF6 என்ற இணையதளத்தில் மூலம் நாளை மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.