India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மங்களூர் வங்கி கொள்ளை வழக்கில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரித்து வந்த நிலையில், பத்மநேரியை சேர்ந்த முருகாண்டி ஜோஸ்வா என்பவரின் தந்தை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ தங்க நகைகளை போலீசார் இன்று (ஜன.24) பறிமுதல் செய்துள்ளனர். மேலும், முருகாண்டியின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் இன்று (ஜன-24) வழக்குகள் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளராக விஜயகுமாரை தமிழ்நாடு அரசு இன்று (ஜன.23) நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர் விரைவில் நெல்லை மாநகரின் காவல்துறை துணை ஆணையாளராக பொறுப்பேற்க உள்ளார். புதிதாக நெல்லை மாநகரின் காவல்துறை ஆணையாளராக பொறுப்பேற்க உள்ள விஜயகுமாருக்கு காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பத்திர தீப விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டிற்கான இந்த விழா வருகிற 27-ஆம் தேதி இரவு தொடங்குகிறது. அன்று அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ஆம் தேதி இரவு ஆறு மணிக்கு தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. 29ஆம் தேதி மாலை மகா நந்தி தீபம் ஏற்றப்படும்.
ஜனவரி மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜன.24) பகல் 11 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் நிலையில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை புத்தகத் திருவிழா வரும் 31ஆம் தேதி நெல்லையில் தொடங்குகிறது. நெல்லை மாநகராட்சி வர்த்தக மையம் அரங்கில் புத்தகத் திருவிழா தொடங்கி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்க உள்ளனர். பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நெல்லையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சமூக வலைதளங்களில் வந்த விளம்பர லிங்கை கிளிக் செய்து அதன் மூலம் விளையாடி உள்ளார். அதில் அதிக தங்கம் வாங்கி விற்கலாம் என கூறியதை அடுத்து சிறிது சிறிதாக ரூ.10 லட்சம் வரை அதில் முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து இந்த பணத்தை அவர் எடுக்க முயன்றபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து நேற்று போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
ஜன.25,28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நெல்லை வழியாக செல்லும் குருவாயூர் ரயில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை வழியாக இயங்காது. குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்(16128) ஜன.24,27,29 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் நேற்று(ஜன.22) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், செங்கோட்டை – தாம்பரம் சூப்பர் பாஸ்ட் ரயிலில்(20684) பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையில், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் வருமானத்தில் 3ஆம் இடம் பிடித்துள்ளது. கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடைத்த முதல் வருட வருமானம் ரூ.1.5 கோடியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளனர்.
விஜயநாராயணம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் 20.02.2025 அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னோடியாக மன்னார்புரம் நூலகத்தில் வைத்து காலை 10.00 மணி முதல் 01.00 மணிவரை மனுக்கள் பெறப்படும். இதில் மனுக்கள்பெறப்பட்டு மக்களின் தேவை குறித்து சிறப்பு குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.