India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரத்தின் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் கூட்டங்கள் நடத்துவதற்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்படுவதாக திருநெல்வேலி மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய நிர்வாகிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் ஆவார். இதுபோல் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் மாரியப்பனுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<

பிரதமர் திட்டத்தின் பெயரில் போலி இணையதளங்கள் செயல்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என நெல்லை இபிஎப்ஓ தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சுகாதாரம், கல்வி, ரயில்வே போன்ற 12 துறைகளில் ஆள்சேர்ப்பு நடப்பதாக விண்ணப்பங்களை கோறுகின்றன. இதை நம்பி தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். திட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்.

கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் வ உ சிதம்பரனார் திருஉருவச் சிலைக்கு (5.9.2025) காலை 9 மணிக்கு அரசின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் ஆகியோர் மாலை அணிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் எம்பி, எம் எல் ஏக்கள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.04] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 4ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த காவல் பணி ஆளுநர்கள் அரசு வழக்கறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். மொத்தம் 58 பேரை எஸ்.பி சிலம்பரசன் இன்று நேரில் அழைத்து பாராட்டினார். சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நெல்லை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை<

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவித்ததாவது தாம்பரத்தில் செப். 5 அன்று நடைபெறும் இந்திய விமானப்படையின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் 21 வயதுக்குள் திருமணமாகாத பெண்கள் பங்கேற்கலாம். 1.1.2005 முதல் 7.1.2008 வரை பிறந்தவர்கள், +2 அல்லது 3 ஆண்டு டிப்ளோமா, 2 ஆண்டு தொழிற்கல்வியில் 50% மதிப்பெண் பெற்றவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.