Tirunelveli

News February 15, 2025

திருநெல்வேலி-சென்னை கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

image

நெல்லை-சென்னை இடையே மின் மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரயில் பாதை இருந்தும் போதுமான ரயில்கள் இருந்தும் ரயில்வே ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே கூடுதல் ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகளை நியமனம் செய்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

News February 15, 2025

மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை கைது

image

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி. இவரது மகள் அப்பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை பாலியல் தொல்லை செய்து கர்ப்பமாகியதாக கூறப்படுகிறது. இது குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியின் தந்தையை நேற்று (பிப்.14) கைது செய்தனர்.

News February 15, 2025

31 இடங்களில் உதயமாகும் முதல்வர் மருந்தகம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்களை பிப். 24அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதில் 20 மருந்தகங்கள் தனிநபர் தொழில் முனைவர் மூலமும், 11 இடங்கள் கூட்டுறவுத் துறை மூலமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கலெக்டர் சுகுமார் செய்து வருகிறார்.

News February 15, 2025

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

image

இட்டமொழி அழகப்பூரத்தை சேர்ந்த கோவில் பூசாரி இளங்காமணி நேற்று மாலை கோவிலில் பூஜை செய்வதற்காக தனது 3 வயது மகன் சுந்தரபாண்டியுடன் சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சுந்தரபாண்டியை  பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். விஜயநாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 15, 2025

சிறுவனின் இறப்புக்கு நோயின் தன்மையே காரணம் – அமைச்சர்

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது சிறுவன் மருத்துவ உதவியாளர் ஊசி போட்டதால் உயிரிழந்ததாகவும் மேலும் போதிய மருத்துவர்கள் இல்லாதது அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறுவன் இறப்புக்கு காரணம் நோயின் தன்மையே என தெரிவித்தார்.

News February 14, 2025

திருநெல்வேலி உதவி ஆணையர் பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்து இன்று (பிப்ரவரி 14) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு திருநெல்வேலி உதவி ஆணையர் (கலால்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்பார் என கூறப்பட்டுள்ளது. அறிவிப்பை தொடர்ந்து வள்ளிக்கண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News February 14, 2025

போக்சோவில் கைதான பேராசிரியர் டிஸ்மிஸ்

image

முன்னீர்பள்ளம் அருகே உள்ள மருதகுளத்தைச் சேர்ந்த பாளை சேவியர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பணிபுரியும் பிரைட் ஜூவட்ஸ் (34) என்ற தற்காலிக பேராசிரியர் அந்தக் கல்லூரியில் பயிலும் 17 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதியப்பட்டு நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் பேராசிரியர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

News February 14, 2025

கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நீதிமன்ற விசாரணைக்கு பின்பு இன்று நெல்லை மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீயிட்டு அழித்தனர்.

News February 14, 2025

வனத்துறை வாகனம் ஏலம் அறிவிப்பு

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ராமேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலக பயன்பாட்டில் உள்ள ஜீப் வாகனம் பிப்.24 அன்று காலை 11 மணியளவில் ஏலம் விடப்படுகிறது .ஏலம் எடுக்க விரும்புவோர், வைப்புத் தொகையாக ரூ.5,000 துணை இயக்குனர் களக்காடு சரணாலயம் என்ற பெயரில் வங்கி டிடி எடுத்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News February 14, 2025

கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

image

முன்னீர்பள்ளம் அருகே உள்ள மருதகுளத்தைச் சேர்ந்த பாளை சேவியர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பணிபுரியும் பிரைட் ஜூவட்ஸ் (34) என்ற தற்காலிக பேராசிரியர் அந்தக் கல்லூரியில் பயிலும் 17 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதியப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!