India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று [பிப்.20] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர்! என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவுன் காட்சிமண்டபம் பேட்டை ரொட்டிக்கடை ஸ்டாப் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெல்லையிலிருந்து சேர்மாதேவி பத்தமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் அதே போன்று அங்கிருந்து வரும் வாகனங்களும் நெல்லை வருவதற்கு வசதியாக போக்குவரத்து மாற்றம் என சமூக வலைதளங்களில் வந்த செய்தி தவறானது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டரின் 193வது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று(பிப்.20) உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அந்த மாதத்தில் 2வது சனிக்கிழமை(மார்ச் 8) வேலை நாளாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பகிரவும்
பாளை தெற்கு பஜார் கிழக்கு உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவில் இன்று காலை நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து அந்தப் பெண் பாளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லையில் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விகாஸ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்- 27 அன்று காலை 9முதல் காவல்கிணறு சந்திப்பு ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பயனாளிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
நெல்லை டவுன் காட்சி மண்டபம், பேட்டை ரொட்டி கடை ஸ்டாப் ஆகிப் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு, பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெலையிலிருந்து பாபநாசம், கடையம், முக்கூடல், சேரன்மகாதேவி, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், அதே போன்று அங்கிருந்து வரும் வாகனங்களும் நெல்லை வருவதற்கு வசதியாக 20 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருவரங்க நேரியை சேர்ந்த சுதன் நித்தியானந்தம் (19) என்பவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற போது மூணாறில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இவருடன் சேர்ந்து 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருவரங்க நேரியை சேர்ந்த சுதன் நித்தியானந்தம் (19) என்பவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற போது மூணாறில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
நெல்லை அருகே உள்ளது தெற்கு விஜயநாராயணம். இவ்வூரில் முஸ்லீம்களே இல்லை. ஆனால் இங்கு ஆண்டு தோறும் ஆடி -16-ல் கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. கந்தூரி விழாவை இங்கு இந்துக்களே நடத்துகின்றனர். விழாவிற்காக கேரளா உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் விஜயநாரயணத்திற்கு வருவது வழக்கம். இங்குள்ள பல இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தர்காவின் பெயரில் மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் சூட்டுகின்றனர்.
பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முன்னாள் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (பிப்-19 ) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.