Tirunelveli

News February 23, 2025

கடந்தாண்டு கணக்கெடுப்பில் 14 புலிகள்

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 14 புலிகள் இருப்பது தெரிய வந்ததாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா நேற்று ( பிப்.22 ) பாபநாசத்தில் தெரிவித்தார். வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால் தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் புலிகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்றதாக தெரிவித்தார்.

News February 23, 2025

மீண்டும் நெல்லை – கொல்லம் ரயில்

image

நெல்லை- கொல்லம் இடையே தென்காசி வழியாக மீட்டர்கேஜ் காலத்தில் பகல் நேர ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இரு மாநில ரயில் பயணிகளின் நலனை கருதி நெல்லை- கொல்லம் இடையே தென்காசி வழியாக 3 ஜோடி ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

News February 23, 2025

மாணவர்களுக்கு வங்கி கடன் ஏற்பாடு – ஆட்சியர் தகவல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று கூறுகையில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தனித்திறமை நிறைந்துள்ளது. அதை மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக கற்றுக்கொண்டு, உங்களுக்கு பிடித்தமான பாடத்தைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். உயர் கல்வி பெற தேவையான வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது என்றார்.

News February 23, 2025

நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

image

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ( பொ) மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997ன் படி நேற்று ( பிப்.22 ) முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நெல்லை மாநகரில் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா போன்றவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பட்டியல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (பிப்.21] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர்  அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

நெல்லை அஞ்சலகங்களில் கங்கை நீர் விற்பனை

image

நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- கங்கோத்ரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கைநதி நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த கங்கைநீர் பாட்டில்கள் சிறப்பு விற்பனை நெல்லை, பாளையங்கோட்டை , அம்பாசமுத்திரம் ஆகிய தலைமை அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News February 22, 2025

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

image

நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் வணிகவளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் (https://tirunelveli.nic.in.) மாசு கட்டுப்பாடு வாரிய தளத்திலும் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்யலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

நெல்லை: பசுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் 

image

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. சுற்று சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பத்தை (www.tnpcb.gov.in) என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

News February 22, 2025

கோடை மழை: மின்வாரியம் முக்கிய அறிவிப்பு

image

கோடை மழை இடி, மின்னல், நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்சாதனங்கள், மரங்கள், அருகிலேயே நிற்க வேண்டாம். மின்சாரம் சேவைகளுக்கு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP) நெல்லை மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மின்னகம் மின் நுகர்வோர் சேவை மைய எண் 94987 94987 தொடர்பு கொள்ளலாம். *ஷேர்

News February 22, 2025

ராதாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

image

நெல்லை மாவட்டம் சமத்துவபுரம் சமுதாய நலக்கூடத்தில் மார்ச்.5 ஆம் தேதி  காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எலும்பு முறிவு, கண் மருத்துவ சிகிச்சை, பல் சிகிச்சை, புற்றுநோய், காச நோய் சிகிச்சை முகாமில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. நாள்பட்ட சளி, இருமல், சைனஸ் சம்பந்தப்பட்ட நோய்களும், ரத்த பரிசோதனை, பி.பி., சுகர் பரிசோதனைகளும் மற்றும் ஸ்கேன் இலவசமாக பார்க்கப்படுகின்றன. *ஷேர்

error: Content is protected !!