Tirunelveli

News February 5, 2025

முதலமைச்சர் நாளைய நிகழ்ச்சிகள் விபரம் அறிவிப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய (6/2/25) நிகழ்ச்சிகள்.
காலை 11.15 சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை
காலை 11.45 கங்கைகொண்டான் sipcot வளாகத்தில் நடைபெறும் Tp power solor நிறுவனத்தின் உற்பத்தியினை தொடங்கி வைத்து பார்வையிடுதல் .
பகல் 12.10 கங்கைகொண்டான் sipcot வளாகத்தில் விக்ரம் சோலார் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டுதல்
மாலை 4 மணி காந்தி மார்க்கெட் நிகழ்ச்சி

News February 5, 2025

நெல்லையில் மருத்துவ கழிவு; கலெக்டர் பரபரப்பு தகவல்

image

நெல்லை ராஜகோபாலபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சியின் ஆய்வு தொடர்கிறது. காவல்துறையிடம் புகார் பெறப்பட்டு வருவதாகவும் சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News February 5, 2025

மீண்டும் மருத்துவக் கழிவு மக்கள் அதிர்ச்சி

image

நெல்லையில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரெட்டியார்பட்டி அருகே மீண்டும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது. காலாவதியான மாத்திரைகள், டானிக்கள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளது. அதை தீ வைத்து எரிக்கவும் முயற்சி செய்யப்பட்ட நிலையில் பாதி எரிந்த  நிலையில் உள்ளது. மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

News February 5, 2025

நெல்லையில் மீண்டும் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு 

image

நெல்லை மாவட்டம் முக்கூடல், சுத்தமல்லி பகுதியில் கேரளா மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை- குமரி நான்கு வழிச்சாலை ரெட்டியார்பட்டியில் மீண்டும் காலாவதியான மாத்திரை, டானிக், ஆயின்மென்ட் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொட்டிய நபர்கள் அதனை தீ வைத்து எரித்து அழிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

News February 5, 2025

நெல்லைக்கு 180 கோடியில் புதிய திட்டம் 

image

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்காக தாழையூத்தில் தொடங்கி கொங்கந்தான் பாறை வரை மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டப் பணிக்காக நிலங்கள் ஆர்ஜீதம் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் முதற்கட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் நெல்லையில் நடைபெறும் விழாவில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். 180 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைய உள்ளது.

News February 5, 2025

நெல்லை ஆட்சியருக்கு எழுத்தாளர் புகழாரம்

image

பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் இன்று (பிப்-5) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், 3 ஆண்டுகளாக நெல்லை புத்தகக் கண்காட்சியை ஒரு ‘மாடல்’ புத்தகக் கண்காட்சியாக நடத்திய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அந்த பொறுப்பில் இருந்து விடைபெறுகிறார். அவருடைய தமிழ்ப்பணியை நெல்லை மக்கள் என்றும் நினைப்பார்கள் என தெரிவித்துள்ளார். ஆட்சியர் கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News February 5, 2025

முதல்வர் ஸ்டாலின் வருகை- ட்ரோன்கள் பறக்க தடை

image

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 6, 7 ஆகிய தினங்களில் நெல்லை வருகிறார், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு வருகை தருகிறார். அவர் வருகையை முன்னிட்டு கங்கைகொண்டான் பகுதியில் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் கங்கைகொண்டான் மற்றும் தாழையூத்து அதன் சுற்றுவட்டார பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை. விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நேற்று  ( பிப்.4 ) தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

பஞ்சாயத்து கிளர்க் கொலை; போலீஸ் பரபரப்பு தகவல்

image

பழவூர் அருகே வேப்பிலாங்குளம் பஞ்சாயத்து செயலராக இருந்த சங்கர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து இன்று போலீஸ் தரப்பில் கூறுகையில், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் கொலையாளிகள் குறித்து இரண்டு மூன்று தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை வேகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்கள்.

News February 5, 2025

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம்

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று(பிப்-5) பகல் 11 மணிக்கு மிக முக்கிய நிகழ்ச்சியான “திருநெல்வேலி” பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுனாமி அம்பாள் ரத வீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி செய்துள்ளார்.

News February 4, 2025

மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருநெல்வேலி வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரம் முழுவதும் நாளை புதன்கிழமை 5ஆம் தேதி காலை 6:00 மணியிலிருந்து ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து திருநெல்வேலி மாநகர காவல் துறை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் விரிவான செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!