Tirunelveli

News March 17, 2025

நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நெல்லையில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 17, 2025

நாய் கடித்து 18 ஆடுகள் பலி?

image

முனஞ்சிபட்டியை சேர்ந்தவர் மூக்காண்டி மகன் சுந்தர். ஆடுகள் மேய்க்கும் தொழிலாளியான இவர் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று குட்டி ஆடுகளை கிடையில் அடைத்து சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது கிடையில் இருந்த 18 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் நாய்கள் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News March 17, 2025

ஒரே நாளில் 3 பேர் குண்டாஸில் கைது

image

முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பால இசக்கி, சேரன்மகாதேவியை சேர்ந்த சுப்பிரமணியன், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி, அடிதடி, அச்சுறுத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை நிலையில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேரையும் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

News March 17, 2025

நெல்லை: இரவுநேர ரோந்துபணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்-16] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி (SJHR) துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

நெல்லை: கடன் தொல்லை தீர்க்கும் ஆலயம்

image

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் புருஷோத்தம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால் ‘புருஷோத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ‘ஏகபத்தினி விரதர்’ என்றும் பெயருண்டு. மூலவர் புருஷோத்தம பெருமாள் கைகளில் 2 சங்கு 2 சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

News March 16, 2025

நெல்லை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியர் கைது

image

களக்காடு பகுதியை சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வரும் மாவடி புதுரை சேர்ந்த மோகன் (54) என்பவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் மோகன் நேற்று கைது (மார்ச்-15) செய்யப்பட்டார்.

News March 16, 2025

கோயில்களில் அறங்காவலர் குழு விண்ணப்பிக்க வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய மாவட்ட குழு அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு நியமன உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையர் இந்து சமய அறநிலை துறை அலுவலகம் 24பி, 26வது குறுக்கு தெரு மகாராஜா நகர் நெல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

News March 16, 2025

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு

image

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவரும் பிரபல எழுத்தாளரும், தமிழ் ஆர்வலருமான நாறும்பூ நாதன் உடல்நலக் குறைவால் இன்று(மார்ச்.16) காலமானார். அவருடைய மறைவு எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பாளையங்கோட்டை சாந்தி நகரில் குடியிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

நெல்லை மாவட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய ராணுவ ஆள் சேர்ப்பிற்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் இதில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்.10 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. <>லிங்க் <<>>கிளிக் செய்யவும்

News March 16, 2025

மறைந்த தவெக மாவட்ட செயலாளரின் கண்கள் தானம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி நேற்று(மார்ச்.15) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழக நிறுவன தலைவர் விஜய் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்ட தமிழக வெற்றிக் கழக கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!