Tirunelveli

News February 12, 2025

நெல்லை இஎஸ்ஐ மருத்துவமனையில் MRI, CD ஸ்கேன்: MP கோரிக்கை

image

நெல்லை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது, “நெல்லை வண்ணாரப்பேட்டையில் இஎஸ்ஐ மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உள் நோயாளிகள் படுக்கை வசதியை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். மேலும் எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்” என்றார் .

News February 12, 2025

சமுக வலைத்தளம் கண்காணிப்பு – நெல்லை எஸ்பி எச்சரிக்கை 

image

நெல்லை மாவட்ட காவல்துறை நேற்று(பிப்.11) வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லையில் சமூக வலைத்தளங்களை போலீசார் உண்ணிப்பாக  கண்காணித்து வருகின்றனர். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.

News February 11, 2025

கொலை குற்றவாளி மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

image

முக்கூடல் அருகே மருதமுத்தூர் பகுதி சேர்ந்த ராமையா (35 )என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் ,சுந்தர், அவரது அண்ணன் தாமரைச்செல்வன் ஆகிய மூன்று பேர் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குண்டாஸில் கைது

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அருண்குமார் (37 )என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சந்திப்பு ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் பரிந்துரையின்படி நெல்லை போலீஸ் மாநகர கமிஷனர் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் அருண்குமார் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 11, 2025

தண்டவாளத்தில் விளையாட்டுத்தனம் காட்டக்கூடாது – ரயில்வே 

image

நெல்லை சந்திப்பு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் கற்களை வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும். விளையாட்டு தனத்தை ரயில் வழித்தடத்தில் காட்டக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

புத்தக திருவிழாவில் ரூ.1.8 கோடிக்கு புத்தகம் விற்பனை

image

நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் 8 வது பொருநை புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 31 தொடங்கி நேற்று வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 124 அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 11 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ரூ.1.8 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அரிய வாய்ப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு 35 ரூபாய் மட்டுமே செலுத்தி வெறிநோய் ஊசி செலுத்திக்கொள்ளும் வசதியினை கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை செல்ல பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News February 10, 2025

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம்

image

திருநெல்வேலி மாநகர டவுன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோவிலில் இன்று (பிப்.10) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கோவில் கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 10, 2025

தேசிய திறனறிவு தேர்வு மாணவர்களுக்கு வாய்ப்பு

image

நடப்பு பிப்ரவரி மாதத்தில் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முழு விபரங்கள் www.kalviseitiofficial.com என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இதில் பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 10, 2025

தண்டவாளத்தில் கற்களை வைத்த 4 சிறுவர்கள் கைது

image

நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் வேலி கற்கள் வைக்கப்பட்டது. இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் வேலி கற்கள் வைத்தது தெரிய வந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!