Tirunelveli

News February 13, 2025

நெல்லை அரசு பஸ்களில் பயணம் செய்ய பணம் தேவையில்லை 

image

நெல்லையில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் வெளி மாவட்டம் செல்கிரது. டெப்போக்களுக்கு புதிதாக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் மிஷின்கள் வந்ததுள்ளது. அதை பயன்படுத்துவதற்கு கண்டக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அனைத்து பஸ்களிலும் இது பயன்பாட்டில் வர உள்ளது. பொது மக்கள் தங்கள் பணத்தை வீட்டில் மறந்து வைத்து வந்தால் கூட அலைபேசி செயலிகளை பயன்படுத்தி பயணிக்கலாம்.

News February 13, 2025

நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்

image

திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த டி.பி.எம் மைதீன் கான் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார். திமுக பொது செயலாளர் துரை முருகன்  இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப்பிற்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News February 13, 2025

சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு சாலை மறியல்

image

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு குழந்தையின் உறவினர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று நீதி கேட்டு உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடப்பதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

News February 13, 2025

ஆன்லைன் டிரேடிங் மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை

image

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆன்லைன் டிரேடிங் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 50 முதல் 60 சதவீதம் லாபம் என்று கூறி ஆசை வார்த்தைகள் பேசி சைபர் கிரைம் கொள்ளையர்கள் மோசடி செய்வதற்கு முயற்சிக்கின்றனர். அதை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

News February 13, 2025

நெல்லைக்கு புதிய துணை கலெக்டர் நியமனம்

image

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையில் துணை கலெக்டர் அந்தஸ்தில் பல்வேறு பணியிடங்களில் பணியாற்றி வரும் துணை கலெக்டர்கள் 30 பேரை பணியிடம் மாற்றம் செய்து வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை தமிழ்நாடு சிமெண்ட் கழக முதுநிலை மேலாளர் நெல்லை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தனி துணை கலெக்டராக நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News February 12, 2025

சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்பு

image

டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட்டு அசிஸ்டெண்ட் பதவிக்கு 241 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, (25 ஆங்கிலவார்த்தைகள்/ நிமிடம்) தட்டச்சு திறன், அடிப்படை கணினி அறிவு ஆகியன. இதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை. தேர்வு நடைபெறும் இடங்கள்: மதுரை, சேலம், நெல்லை, குமரி, திருச்சி, சென்னை, கோவை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.3.2025. <>*ஷேர்<<>>

News February 12, 2025

நெல்லையப்பர் கோயிலில் திருநடன காட்சி

image

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை சௌந்தர சபையில் காந்திமதி அம்பாளுக்கு சௌந்தர சபாபதி திருநடன காட்சி தரும் உற்சவமும், நாளை மறுநாள் கோவில் பொற்றாமரை குளத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

News February 12, 2025

நெல்லை: மாணவ மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி

image

திருநெல்வேலி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், 9 முதல் 15 வயதுடைய இளம் தலைமுறை உங்களை ‘கடலாக’ கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை கருப்பொருளாக வைத்து கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக அஞ்சல் துறை தலைவர் சென்னை, நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார்.

News February 12, 2025

நெல்லை ரயில்களில் இன்றும் பக்தர்கள் கூட்டம்!

image

திருச்செந்தூரில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்றும் நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அதிகளவில் ஏறியதால், வழக்கமாக ரயிலில் செல்லும் அலுவலர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பலர் நின்று கொண்டு பயணித்தனர். எனவே முக்கிய திருவிழா நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது

News February 12, 2025

திருநெல்வேலியில் இன்றைய நிகழ்ச்சிகள் விவரம்

image

#இன்று(பிப்ரவரி 12) காலை 10 மணிக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10.30 மணிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்கலன் வண்டிகளை வழங்கும் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.

error: Content is protected !!