Tirunelveli

News March 21, 2025

நெல்லை: பைக் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி

image

வடக்கன்குளம் காவல்கிணறு சாலையில் இரு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டு பணகுடி புனித அன்னாள் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் சபரி ராம்(11) என்பவர் பலியானார். பலியான மாணவர் வடக்கன்குளம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

News March 21, 2025

பணகுடியில் பைக் மீது கார் மோதி இருவர் பலி

image

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணற்றில் நேற்று (மார்ச்-20) மாலை காருடன் பைக் மோதிய விபத்தில் இருவர் பலியானார். இதில் பைக்கில் வந்த நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2025

நெல்லையில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் அறிவிப்பு 

image

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. ஹாக்கி யூனிட் திருநெல்வேலி சட்ட திட்டங்கள் படி இப்போட்டிகள் நடத்தப்படும். ஆண் பெண் அணிகள் போட்டியில் பங்கேற்கலாம். ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் பொறுப்பாளர்கள் தங்கள் அணிகளை தயார்படுத்திக்கொள்ளுமாறு திருநெல்வேலி ஹாக்கி சங்க தலைவர் சேவியர் சற்குணம் தலைமையில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News March 21, 2025

நெல்லையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம். சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் பாளையங்கோட்டை ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். *ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

நெல்லை மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லை கோட்டத்தில் 362 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க*

News March 21, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News March 20, 2025

நெல்லை ESIC மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை வண்ணார்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனையில் வரும் 28-ம் தேதி வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. மருத்துவ புற்று நோயியல் பகுதி நேர வேலை வாய்ப்பும், முழு நேர வேலை வாய்ப்பான எமர்ஜென்சி, விபத்து பிரிவு, ரேடியோலாஜி பிரிவு,மற்றும் பொது மருத்துவத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 09/30 மணி முதல் 10.30 வரை நடக்கிறது. *ஷேர் பண்ணுங்க*

News March 20, 2025

ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

image

நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பணியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும் தொடர்ச்சியாக உள்ளது. இன்று முனஞ்சிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர் ஒருவர் படியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டார். நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News March 20, 2025

நெல்லை அஞ்சலக கூட்டத்தில் குறைதீர் கூட்டம்

image

நெல்லை அஞ்சலக முதுநிலைக்கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் மார்ச் 24 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், திருநெல்வேலி கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி  வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

நெல்லை வழியாக கோடைகால சிறப்பு ரயில்

image

நெல்லை வழியாக நலகொண்டா, குண்டூர், திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் வழியாக கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சார்லப்பள்ளி – கன்னியாகுமரிக்கு புதன்கிழமையும், கன்னியாகுமரி – சாரலப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமையும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை இயக்க ரயில்வே நிர்வாகம் நேற்று பரிந்துரைத்துள்ளது.

error: Content is protected !!