Tirunelveli

News March 23, 2025

நெல்லையில் சயனக் கோலத்தில் அபூர்வ துர்கை அம்மன்

image

கங்கைகொண்டான் அருகே வடக்கு செழியநல்லூரில் அருள்மிகு சயன வனதுர்கை, வைஷ்ணவி துர்கை அம்பாள் கோயில் உள்ளது. இங்கு கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில் 8 கரங்களுடன் பெண் குழந்தையை அணைத்தபடி துர்கை, அருகில் நாகராஜ பரிவார தேவதைகள் காட்சியளிக்கின்றனர். திருமண தடைகள் நீங்க வைஷ்ணவி துர்கைக்குப் பச்சை நிறப் பட்டுடன் மல்லிகை பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

News March 23, 2025

நெல்லையில் சட்டென்று மாறும் வானிலை

image

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(மார்ச்.23) காலை 11 மணிக்குள் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்து செல்வது நல்லது.

News March 23, 2025

 கல்குவாரியில் கிரேன் கவிழ்ந்து வாலிபர் பலி

image

பீகாரை சேர்ந்தவர் சர்பரேக் ஆலம் (20). இவர் பழவூர் அருகே உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.22) குவாரிக்கு புதிய இயந்திரம் வந்துள்ளது. இதனை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்ததில் சர்ப்ரேக் ஆலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2025

நெல்லை: இரவு ரோந்து  பணி அதிகாரிகள் விவரம் 

image

நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரதாபன், திருநெல்வேலி ஊரகம் ஆய்வாளர் வேல்கனி, நாங்குநேரி ஆய்வாளர் கண்ணன், வள்ளியூர் ஆய்வாளர் ராஜாராம், சேரன்மாதேவி ஆய்வாளர் ஜெயசீலன், அம்பை ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

திருமணத்தடை நீங்கும் ஆலயம்

image

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் அகத்தீஸ்வரர் சின்ன முத்திரை காட்டியபடி இருக்கிறார். இங்கு சிவனுக்குரிய முறையில் பூஜை நடக்கிறது. சிவராத்திரி அன்று 4 கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் வேண்டினால் திருமணத்தடையும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். *மற்றவர்களுக்கு பகிரவும்*

News March 22, 2025

நெல்லை: கிரேன் சரிந்து விழுந்து இளைஞர் பலி

image

ராதாபுரம் அருகே இருக்கன் துறை கிராமம் புத்தேரி அருகே இயங்கி வரும் கல் குவாரியில் இன்று காலை கிரேன் பழுது பார்த்துக்கொண்டிருக்கும் போது கிரேன் சரிந்து விழுந்ததில் பீகாரைச் சேர்ந்த சர்ப்ரைஸ் ஆலம் என்பவர் படுகாயம் அடைந்தார்.சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 22, 2025

நெல்லை மாவட்டத்தில்  64 மில்லி மீட்டர் மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் இன்று மார்ச் 22 அதிகாலை 7 மணி  தற்போது வரை 64.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மூலைகரைப்பட்டியில் 15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது .ராதாபுரம் வட்டாரத்தில் கடற்கரை கிராமங்களில்11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியார் அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கு, ஊத்து தலா 4 மில்லி மீட்டர், நாங்குநேரி 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.

News March 22, 2025

BREAKING நெல்லையில் கனமழை அறிவிப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

பிஎம் கிருஷ்ணன் திட்டத்தில் 22,000 விவசாயிகள் பதிவு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 49,481 பி எம் கிஷான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை சுமார் 22,000 பேர் பி எம் கிஷான் மற்றும் இதர விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2025

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ 5.50 லட்சம் நிவாரணம்

image

நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தில் கடந்த ஜனவரி 5 அன்று எதிர்பாராத காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 36.69 ஹெக்டேர் நெல் பயிர்கள் சேதமானது. இதற்கு நிவாரண தொகையாக ரூ.5.50 லட்சம் 135 விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!