Tirunelveli

News September 24, 2025

நெல்லை: சமூக வலைதளத்தில் பிரச்சனையை தூண்டிய நபர் கைது

image

நெல்லை, ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்த தங்கபாண்டி (35) என்பவர் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இதுக்குறித்து ராதாபுரம் காவல்துறையினர்க்கு தகவல் தெரியவந்ததையடுத்து இன்று தங்கதுரையை கைது செய்தனர்.

News September 24, 2025

நெல்லை ரயில்வே கேட் இன்று மூடல்

image

திருநெல்வேலி வாஞ்சி மணியாச்சி இடையே உள்ள ரயில்வே வழி தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கங்கைகொண்டான் அருகே புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று செப்டம்பர் 24 பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். எனவே இந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News September 24, 2025

நெல்லை காசு மாற்று தரத்தில் பின்னடைவு

image

இந்திய அளவில் காற்று மாசு குறைவாக உள்ள சிறந்த நகரங்களில் நெல்லை முக்கிய இடம் பிடித்திருந்தது. காற்று மாசு தரம் 46 என்ற சிறந்த குறியீட்டு எண் நிலையில் இருந்து. தற்போது 60 ஆக பதிவாகியுள்ளது. இது சிறிய பின்னடைவாக கருதப்படுகிறது. ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்தால் ஏற்படும் புகை மண்டலம், மற்றும் பாதாள சாக்கடை குழி தோண்டுவதால் சாலைகளில் பறக்கும் தூசி காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

News September 24, 2025

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர் குறைகள் ஏதும் இருந்தால் கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம்.

News September 24, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.23] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்ணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News September 24, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஜூலை 23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 23, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.23] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News September 23, 2025

BREAKING நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய விஏஓ

image

கூடங்குளத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் தனக்கு பாத்தியப்பட்ட 1 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக மனு செய்தார். பின்னர் விஏஓவிடம் பட்டா மாறுதல் சம்பந்தமாக விவரம் கேட்ட பொழுது ரூ.25,000 லஞ்சம் வழங்கும்படி கூறியுள்ளார். இதனால் அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அறிவுரைப்படி விஜயா, விஏஓ ஸ்டாலின் ஜெயசீலனிடம் பணத்தை கொடுக்கும் பொழுது போலீசார் கைது செய்தனர்.

News September 23, 2025

2,115 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிப்பு – நெல்லை எஸ்.பி

image

போலீஸ் எஸ் பி சிலம்பரசன் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையினால், இதுவரை மாவட்டத்தில் உள்ள 313 கிராமங்களில், மொத்தம் 2,115 இடங்களில் உள்ள சாதி அடையாளங்கள் வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

நெல்லை: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!