Tirunelveli

News March 25, 2025

நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் இடைத்தேர்தல்

image

நெல்லை உட்பட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மாவட்ட அளவில் மேற்படி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். *ஷேர்

News March 25, 2025

நெல்லையில் போலீஸ் தடை உத்தரவு அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகர பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் தடை உத்தரவு 15 தினங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று 24 ஆம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவின் படி பொது இடங்களில் முன் அனுமதியின்றி கூடுவது, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா நடத்த அனுமதி கிடையாது என மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார்.

News March 25, 2025

நெல்லை சரக டிஐஜி அதிரடி இடமாற்றம்

image

நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை காவல் சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி ராமநாதபுரம் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

News March 25, 2025

சொரிமுத்து அய்யனார் கோவில் செயல் அலுவலர் பணியிட நீக்கம்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் செயல் அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கோவில் பகுதியில் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவில்லை, வரவு, செலவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரி பிரியதர்ஷினி இன்று அவரை பணியிட நீக்கம் செய்துள்ளார்.

News March 25, 2025

ஜாகிர் உசேன் கொலையில் மனித உரிமை ஆணையம் விசாரணை

image

நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக SI வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த வழக்கை  மனித உரிமை ஆனையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க மாநில் டிஜிபி மற்றும் நெல்லை ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 

News March 25, 2025

நெல்லையில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரலில் தொடக்கம்

image

நெல்லை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு கீழ் பாளையகோட்டை அண்ணா விளையாட்டு கக்கன் நகர் அருகே உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 908088 65 63 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 25, 2025

பாபநாசம் கோவில் வாகன காப்பகம் ஏலம் அறிவிப்பு

image

விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட பாபநாசம் கோவில் அருகில் உள்ள வாகன காப்பகம், கட்டண கழிப்பிடம் மற்றும் தள்ளு வண்டிகளில் கட்டணம் வசூல் செய்யும் பணிக்கு ஏப்ரல்.16 அன்று ஏலம் நடைபெற உள்ளது. வி.கே.புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல்.15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வி.கே.புரம் நகராட்சி ஆணையாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2025

கோர விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை அடுத்த ரெட்டியார்பட்டி அருகே நேற்று மாலை நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி ஆகியவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 24, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகு இப்பணிகளை மேற்பார்வை செய்வார்.

News March 24, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

அரசு பஸ் பாஸ் இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே பயன்படுத்தி வரும் 31-03-2025 வரை செல்லத்தக்க பாஸ்களை 30-06-2025 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துமாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம். நாளை மறுநாள் நடைபெறவிருந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!