India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக நான்கு மாதத்தில் 251 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 80 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு நாளை (செப்.27) சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணம் ஆகும். காலை 7 மணி முதல் பஸ்கள் புறப்பட்டு செல்லும். விருப்பமுள்ள பயணிகள் பஸ் நிலைய மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் . *ஷேர் பண்ணுங்க

நெல்லை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

திருநெல்வேலி அருகே ஜெபம் செய்ய சென்ற கிறிஸ்தவர்களை தடுத்து, குங்குமம் பூசி மிரட்டியதாக பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உதவியாளர் அங்குராஜ் உட்பட 3 பேர் மீது சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மத அடிப்படையில் பகைமை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

நெல்லை மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம்வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இங்கே <

தமிழகத்தில் வடகிழக்க்கு பருவ மழை காரணமாக இன்று (செப் 26) பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துங்கள். இடி, மின்னல் நேரங்களில் மரத்த்கின் கீழ் நிற்பதை தவிர்க்கவும்.

களக்காடு எஸ்ஐ சக்தி நடராஜன் மற்றும் போலீசார் பத்மனேரி பாலம் அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிங்கிகுளத்தை சேர்ந்த சிவா காடுவெட்டியைச் சேர்ந்த நம்பி ஆகியோர் சைக்கிளில் வீச்சரிவாள் கத்தியுடன் நின்று கொண்டு சாலையில் சென்ற பொது மக்களை மறித்து ரகளை செய்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சக்தி நடராஜன் மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்க முயன்று பின்னர் தப்பி ஓடினர்.

நெல்லை மக்களே, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 1588 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி, B.E.,/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் பகுதியில் பயிற்சி வழங்கப்படும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். 18.10.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய <

நெல்லை மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 11 இரு சக்கரவாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை பாளை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள வளாகத்தில் வைத்து 29.09.2025ம் தேதி காலை 11.00 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும். பைக்கிற்கு ரூ.2,000 முன் பணமும் மற்றும் 3 சக்கர வாகனத்திற்கு ரூ.3,000 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: மின் கம்பியாள் உதவியாளர் தகுதி தேர்வு வருகிற 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேடு skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அக்டோபர் 17ஆம் தேதி பேட்டை ஐ டி ஐ யில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.