India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு இன்று கஞ்சாவை சொகுசு காரில் கடத்தப்படுவதாக கேரளா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் படி நாங்குநேரி டோல்கேட்டில் இருந்து காரை துரத்தி சென்ற போலீசார் ஏர்வாடி அருகே காரை மடக்கிப் பிடித்து ஒருவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மற்றொரு நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சரணாலயமாகும். இங்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு வகை பறவைகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் இன்று (பிப்.28) அதிக எண்ணிக்கையிலான வலசை பறவைகள் வர துவங்கியுள்ளன. இந்த பறவைகளை ஏராளமான பறவை ஆர்வலர்கள் கண்டு மகிழ்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வருகின்ற மார்ச் 3 அன்று காலை 10 மணியளவில் உலக வனவிலங்குகள் தினம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட வனத்துறை செய்து வரும் நிலையில் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவைதிரும்ப பெற கோரியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிடவும், தமிழக அரசு வழக்கறிஞர் சேமநலநிதி முத்திரைத்தாள் கட்டணத்தை ரூபாய் 30 லிருந்து ரூபாய் 120 ஆக உயர்த்தியதை திரும்ப பெறக் கோரி, நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இன்று ( (பிப்.28) போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நீத்திமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாநகராட்சியில் நேற்று (பிப்-27) மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் 13 வது வார்டு கவுன்சிலர் சங்கர் பேசுகையில், திட்ட பணிகளுக்கான கோப்புகள் நான்கு முறை காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றார். கோப்புகள் காணாமல் போவது மிகப் பெரிய குற்றச்செயல். புகார் அளித்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.
விஜயநாராயணம் அருகே உள்ள ஆண்டார் குளத்தை சேர்ந்த மாரியப்பன் (19)என்பவர் கடந்த 2022 -ம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் மாரியப்பன் உட்பட மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் கோயிலில் மாசித்திருவிழா வரு மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பச்சை சாத்தி பத்தாம் தேதியும், சிவப்பு சாத்தி ஒன்பதாம் தேதியும், திருத்தேரோட்டம் 12ஆம் தேதியும், தெப்ப திருவிழா 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நாட்களில் நெல்லை மாவட்டத்தில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பாளை அருகே உள்ள மேலபாலாமடையை சேர்ந்த ஏசுராஜா தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு மோட்டாரை அணைக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை, அருகன்குளத்தில் பழைய ராமேஸ்வரம் என போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என தல வரலாறு சொல்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ராமலிங்க சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது ராமாயண காவியத்தின் பல சம்பவங்கள் தமிழகத்திலும் நடைபெற்றன என்பதற்குச் சான்றாக உள்ளது.
நெல்லை மாவட்ட வருவாய் அலகு தாசில்தார் கலைமதி துணை கலெக்டர் பதவி உயர்வு பெற்று குமரி நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகு தாசில்தார் சண்முகசுந்தர் பதவி உயர் பெற்று நெல்லை தாமிரபரணி கருமேனியாறு நம்பியார் இணைப்பு திட்ட நில எடுப்பு துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புரந்தர தாஸ் பதவி உயர்வு பெற்று பாளை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.