Tirunelveli

News April 17, 2025

மாவட்ட அளவிலான நிகழ்ச்சிக்கு அழைப்பு

image

திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் (ஏப்ரல் 16) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News April 17, 2025

நெல்லை மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462–2501035, காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, இரயில்வே உதவி – 1512, கடலோர காவல் உதவி – 1093 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.

News April 16, 2025

நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்?

image

நாங்குனேரியைச் சேர்ந்த சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னதுரை Grindr ஆப் மூலம் பழகிய மர்ம நபர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திற்கு இன்று வரவழைத்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துரையை பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தாக்கியது தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.

News April 16, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 16, 2025

நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட தொழில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 17ஆம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கல்வி சான்றிதழ் ஆதார் அட்டை மற்றும் தங்களது சுய விவரங்களை வந்து பங்கேற்கலாம். மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்

image

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

News April 16, 2025

கோடை வெயில் கலெக்டர் முக்கிய அறிவுரை

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று (ஏப்ரல்15) விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: அடுத்து வரும் நாட்களில் கோடை வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் விவரம் மாவட்ட காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கைபேசி எண் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2025

விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

image

நெல்லை பயணிகள் கவனிக்க; கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே குறிப்பில் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையு‌ம், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையு‌ம், திருவனந்தபுரம் – தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி துறை இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி தனியார் பள்ளிகளிலும் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!