India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30) ஆட்டோ டிரைவரான இவர் மாணவ மாணவிகளை டியூஷனுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது 13 வயது சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதனிடையே அவரையும் அவரது ஆட்டோவையும் தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச்.15) காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்து வந்தவர் சஜி. இவர் இன்று சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொது குழுவில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்தார். பொறுப்பேற்று மூன்று மாதம் ஆவதற்குள் அவர் உயிரிழந்தது அவரது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த தொழிலாளி மாரியப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவருக்கும் இடையே மது வாங்கி குடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இசக்கிராஜ் கத்தியால் மாரியப்பனை வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருநெல்வேலி ஊரகத்திற்கு சந்திரசேகர், நாங்குநேரி பிரேமா ஸ்டாலின், வள்ளியூர் சுடலைமுத்து, சேரன்மகாதேவி ஜெயசீலன், அம்பாசமுத்திரம் ரமேஷ் கண்ணா ஆகியோர் இன்று (14ம் தேதி) ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாளையங்கோட்டை சிறை கூடுதல் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருட்கள் வாங்கிய முறைகேட்டில் பாளையங்கோட்டை சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. ஒன்பது நவ கைலாய தலங்களில் குரு தலம். கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடைகள் விலகுவதாக ஐதீகம். *ஷேர் பண்ணுங்க*
நெல்லை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகர் நல மையங்களில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மெடிக்கல் ஆபீஸர், ஸ்டாப் நர்ஸ், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், மருத்துவமனை ஊழியர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பத்தை tirunelveli.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மார்ச்.24 க்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
நெல்லை தச்சநல்லூர் மேலகரையை சேர்ந்தவர் தங்கராஜ் (40)வக்கீலான இவர் நேற்று வழக்கு ஒன்றில் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாதாடி கொண்டிருந்தார் .திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையே மார்ச் 20 முதல் 25 நாட்கள் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் எண் 5004, திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் எண் 5003 ஆகிய 2 ரயில்களும் முழுமையாக ரத்து செய்வதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.