Tirunelveli

News May 21, 2024

நெல்லை அருகே  சிறுத்தை சிக்கியது

image

பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் கிராமத்தில் சிறுத்தை ஆட்டை தூக்கி சென்ற நிலையில், அனவன்குடியிருப்பு பகுதியில் சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு அந்த கூண்டு ஒன்றில் சிறுத்தை சிக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

மாணவிகளே நாளை இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…

image

திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் கோடை விடுமுறை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு தினமும் பல்வேறு கைவினை கிளை பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுகின்றன. நாளை (மே 22) காலை 10 மணி முதல் வாழ்த்து அட்டை சுலபமாக தயாரிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என காப்பாட்சியர் சிவ சத்தியவல்லி தெரிவித்துள்ளார்.

News May 21, 2024

மீனவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான தென் தமிழக கடற்கரை பகுதியில் கடல் அலை 0.5மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை உயரக்கூடும். மேலும் கடலில் நீரோட்டம் அதிவேகத்தோடு இருக்கக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரையோரம் பேரலைகள் எழக்கூடும் என்பதால் பாதுகாப்பாக இருக்கும் படியும் நெல்லை மாவட்ட நிர்வாகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

News May 21, 2024

தீபக் ராஜன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

image

நெல்லை மாநகர கேடிசி நகரில் நேற்று மதியம் கொலையுண்ட தீபக் ராஜன் (34) உடற்கூறாய்வு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (மே.21) முடிவடைந்தது. ஆனால் கொலை குற்றவாளிகள் அனைவரும், கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷ் பண்ணையாரும் கைது செய்யப்பட்ட பிறகு தான் உடலை பெற்று கொள்ளுவோம் என தீபக்கின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 21, 2024

ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

image

தமிழக அரசால் நடத்தப்படும் நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டியில் புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர சேர்க்கை கட்டணம் ரூ.3500 நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய இம்மாதம் 31ம் தேதி கடைசி நாள் ஆகும் என பயிற்சி பள்ளி முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

நெல்லை: நாளை ஆரஞ்சு அலர்ட்!

image

திருநெல்வேலிக்கு நாளை (மே.22) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, நெல்லையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நெல்லைக்கு பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

image

திருநெல்வேலி மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 -ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு என்னும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் வாக்கு எண்ணுவதற்கு 13 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு என்னும் மையத்தைச் சுற்றி இன்று (மே 21) ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News May 21, 2024

மோடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் தீவிரம்

image

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழக நிர்வாகிகள் தேர்தல் பணிக்காக உத்திரபிரதேச மாநிலம் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இன்று (மே 21) நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News May 21, 2024

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை: 3 பேரிடம் விசாரணை

image

நெல்லை கேடிசி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று உணவருந்திவிட்டு வெளியே வந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜனை 6 பேர் கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் இன்று(மே 21) தீபக் ராஜனுடன் ஹோட்டலில் அமர்ந்து உணவருந்திய 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

News May 21, 2024

நெல்லையில் 64.60 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு இன்று(மே 21) காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 64.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!