News August 5, 2024

நெல்லையில் இன்று மேயர் தேர்தல் (2/4)

image

இதையடுத்து நெல்லை மாநகராட்சியின் பொறுப்பு மேயராக துணை மேயர் ராஜு நியமிக்கப்பட்டார். காலியாக உள்ள மேயர் பதவிக்கு ஆக.5 அன்று மறைமுக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஜூலை.31 அன்று வேட்பு மனு விநியோகம் தொடங்கிய நிலையில் ஒருவர் கூட வேட்பு மனுவை வாங்கவில்லை. நேற்று நெல்லையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

Similar News

News January 23, 2026

நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

நெல்லையில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (ஜன.24) நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT

News January 23, 2026

நெல்லை: சாதனை படைத்த பள்ளி மாணவி

image

நெல்லை சங்கர் நகர் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவி இனிகா. இவர் மத்திய அரசின் இந்திய அளவில் நடைபெறும் வீர் கதா 5.0 என்ற கட்டுரை போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவி இனிகா ஆவார். புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாணவியும், ஆசிரியர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ள நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

News January 23, 2026

காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!