India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாநகராட்சி, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தாமிரபரணி நதிக்குள் வெளியேற்றியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) கண்டறிந்துள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்காக மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் செயல்படும் பி.எஸ்.என்., தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் குடிநீர் மாசுபாட்டால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீரை சீர் செய்யும் வரை அங்குள்ள 5 கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை கலைவதற்கும் பெயர் சேர்த்தல் நீக்குதல் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு மனு செய்தல் உள்ளிட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை 11ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை கலைவதற்கும் பெயர் சேர்த்தல் நீக்குதல் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு மனு செய்தல் உள்ளிட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை 11ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களே, மாவட்ட சுகாதார சங்கத்தில் 42 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி 8th, 10th, B.Com, டிப்ளமோ, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ40,000 வரை சம்பளம் வழங்கப்படும்; இதற்கு தேர்வு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.14ம் தேதி. மேலும் விவரங்களுக்கு <

நெல்லை மாநகரத்தில் பணியாற்றிய எஸ்ஐ, எஸ்எஸ்ஐ, ஏட்டுக்கள் உட்பட 10 காவலர்களை நெல்லை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து டிஐஜி சந்தோஷ் ஹதிமாணி உத்தரவிட்டார். மாற்றம் செய்யப்பட்டவர்களில் தச்சநல்லூர் எஸ்ஐ ரமேஷ் மணிகண்டன், பாளை எஸ்எஸ்ஐ சீனிவாசன், மாநகர போக்குவரத்து எஸ்எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அடங்குவர். புதிய பணியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கிடையே நேற்று பிற்பகல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் நாங்குநேரியில் 7.20 மில்லி மீட்டர் மழை கொடுமுடியார மாநகர பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பாளையங்கோட்டையில் 7 மில்லி மீட்டர் மழை மணிமுத்தாறில் 1.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் குறித்த தகவல்களுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மூலம் தொடர்பு கொள்ள முடியும். மேலும் 9786566111 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

பாளை அருகே நடந்த ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான போலீஸ் எஸ்ஐ சரவணன் ஜாமின் கேட்டு மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வழக்கின் புகார் தாரர் தரப்பு ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவித்ததால் பதில் அளிக்க கூறி வழக்கினை வரும் 10ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.