Tirunelveli

News March 16, 2025

நெல்லை மாவட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய ராணுவ ஆள் சேர்ப்பிற்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் இதில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்.10 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. <>லிங்க் <<>>கிளிக் செய்யவும்

News March 16, 2025

மறைந்த தவெக மாவட்ட செயலாளரின் கண்கள் தானம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி நேற்று(மார்ச்.15) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழக நிறுவன தலைவர் விஜய் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்ட தமிழக வெற்றிக் கழக கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

News March 15, 2025

அமெரிக்க அதிபர் சந்திக்க நினைத்த நெல்லை நபர் தெரியுமா.?

image

நெல்லை களக்காட்டை சேர்ந்தவர் பாலம் கல்யாணசுந்தரம். சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். பாலம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் 40 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி தன் சொந்த பணத்தில் ரூ.30 கோடிக்கும் மேல் செலவழித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இவரை தன் தந்தையாக தத்தெடுத்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் இந்தியா வருகையின் போது அரசு சாராமல் சந்திக்க நினைத்த நபரில் இவரும் ஒருவர். *ஷேர் பண்ணுங்க*

News March 15, 2025

நெல்லை: போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது

image

தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30) ஆட்டோ டிரைவரான இவர் மாணவ மாணவிகளை டியூஷனுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது 13 வயது சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதனிடையே அவரையும் அவரது ஆட்டோவையும் தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவும்  செய்துள்ளனர்.

News March 15, 2025

TN BUDGET – நெல்லையில் மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம

image

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச்.15) காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

தவெக செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்து வந்தவர் சஜி. இவர் இன்று சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொது குழுவில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்தார். பொறுப்பேற்று மூன்று மாதம் ஆவதற்குள் அவர் உயிரிழந்தது அவரது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 15, 2025

முன்னீர் பள்ளத்தில் தொழிலாளி குத்திக் கொலை

image

முன்னீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த தொழிலாளி மாரியப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவருக்கும் இடையே மது வாங்கி குடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இசக்கிராஜ் கத்தியால் மாரியப்பனை வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று உயிரிழந்தார்.

News March 15, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருநெல்வேலி ஊரகத்திற்கு சந்திரசேகர், நாங்குநேரி பிரேமா ஸ்டாலின், வள்ளியூர் சுடலைமுத்து, சேரன்மகாதேவி ஜெயசீலன், அம்பாசமுத்திரம் ரமேஷ் கண்ணா ஆகியோர் இன்று (14ம் தேதி) ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

News March 14, 2025

பாளையங்கோட்டை சிறை ADSP சஸ்பெண்ட்

image

பாளையங்கோட்டை சிறை கூடுதல் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருட்கள் வாங்கிய முறைகேட்டில் பாளையங்கோட்டை சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News March 14, 2025

நெல்லையில் திருமண தடைகள் விலகும் ஆலயம்

image

நெல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. ஒன்பது நவ கைலாய தலங்களில் குரு தலம். கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடைகள் விலகுவதாக ஐதீகம். *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!