India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் இரவு ரோந்து அதிகாரிகளை நியமனம் செய்து அட்டவணை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்.18)திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் தொடர்பு எண் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாளையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களை துன்புறுத்தியதாக வந்த தகவல் அறிந்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில், மேலப்பாளையம் காவல்துறையினர் பயிற்சி உரிமையாளர் மீது 323 அடித்தல், 355 செருப்பால் அடித்தல், 75 J J இளம் சிறார்களை தாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அகாடமி உரிமையாளர் ஜலாலுதீனை கைது செய்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று(அக்.,18) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டும். மேலும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லை டவுனில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று(அக்.,18) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, அதிகாலையில் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நெல்லை டவுன் தமிழ்நாடு நகர்புறம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் நாளை மறுதினம்(அக்.,20) காலை 10 மணிக்கு புகைப்படத்துடன் கூடிய இணைய வழி ஜாதி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அவசர பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத்துறை சிறப்பு பொறுப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படிநெல்லை மாவட்டத்திற்கு நீர்வளத்துறை திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் மகேஸ்வரி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
பாளையங்கோட்டை அருகே மூளி குளத்தில் இறுதி ஊர்வலத்தில் வந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் சுப்புராஜ், ராஜேஷ், கௌதம் ஆகிய மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த 3 பேரும் பாளை., அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு : ஏற்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பணியாற்றியவர் பல்வீர் சிங். இவர் அங்கு விசாரணைக்கு வந்த, விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று(அக்.,17) விசாரணைக்கு வந்தபோது, பல்வீர்சிங் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழையின்போது தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை உரிய நடைமுறையில் பாதுகாக்க வேண்டும். எடையை குறைக்க கிளைகளை கவர்ச்சி செய்ய வேண்டும். செடிகள் காற்றில் பாதிக்காதபடி தாங்கு குச்சிகளை வைத்து கட்ட வேண்டும். காய்கறி பயிர்கள் அதிக நீர் தேங்கா வண்ணம் வடிகால் வசதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தினமும் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(அக்.,17) துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ் தலைமையில் காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவிக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.