India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

திருநெல்வேலி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<

திருநெல்வேலி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.10ம் தேதி சனிக்கிழமை பாளை. செயின்ட் ஜான் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5, 8, 10, 12th, டிப்ளமோ, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 86 நிறுவனங்களில் 11,767 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுளளது. வேலைதேடுவோர் tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு – 9499055929. SHARE பண்ணுங்க.

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் மாதம்தோறும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஜனவரி மாதத்தில் வருகிற 4, 5 ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <

கடந்த 2025ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் 27 கொலை வழக்குகளில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 98 பேருக்கு ஆயுள் தண்டனையும் வாங்கித் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுபோன்ற அதிக வழக்குகள் தண்டனை பெற்றுத் தருவது இதுவே முதல் முறையாகும் என மாவட்ட காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 கொலை முயற்சி வழக்கில் 21 பேருக்கு தண்டனை, ஒரு கூட்டுக் கொள்ளை வழக்கில் 2 கொள்ளை வழக்கில் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

நெல்லையை சேர்ந்த சங்கர் (67) தனது மகன் பாலாஜியுடன் வசித்து வருகிறார். இவரது பேரன் தினேஷ் (24) மது குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்து சங்கரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சங்கர் புகாரின் அடிப்படையில் நெல்லை நகரம் போலீஸார் தினேஷை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.