Tirunelveli

News September 27, 2024

மரண தண்டனை தீர்ப்பு: வழிபட நேரம் கொடுத்த நீதிபதி

image

நெல்லையில் நேற்று கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு அளிப்பதற்கு முன்பு, புகார்தாரர்(பாதிக்கப்பட்டவர்) வழக்கின் வாதத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு, வக்கீல் கந்தசாமி புகார்தாரர் தீர்ப்புக்காக கோயிலில் வேண்டிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி சுரேஷ் குமார், தாராளமாக வழிபட சொல்லுங்கள் தீர்ப்பை பொறுமையாக சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

புரட்டாசி 2ஆவது சனி: காலை 7 மணி முதல் சிறப்பு பஸ்

image

புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவதிருப்பதி கோயில்களுக்கு நாளை(செப்.,28) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 7 மணி முதல் இந்த சிறப்பு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் இதற்கான முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2024

நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி மூணாறில் கைது

image

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த எஸ்டேட் மணி என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர். கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வேலூர் மாவட்ட போலீசார் இன்று(செப்.,27) மூணாறில் பதுங்கியிருந்த ரவுடி எஸ்டேட் மணியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News September 27, 2024

யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை பாதிக்காது: நீதிபதிகள்

image

கிருஷ்ணன் என்பவர் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான பருத்திப்பாடு கிராமத்தில் 1700 ஏக்கர் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை ஏற்படும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதனை நேற்று விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் விக்டோரியா கௌரி, மனுதாரர் கூறியது கட்டுக்கதை; யூக்கலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்காது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

News September 27, 2024

நெல்லையை சேர்ந்தவர்கள் குறித்து முதல்வர் கடிதம்

image

நெல்லை இடிந்தகரையை சேர்ந்த 28 பேர் ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்று அந்நாட்டு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பம் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர் அப்பாவு முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளார்.

News September 27, 2024

திருமண நாளன்று வாலிபர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிக்
குளத்தில் பிரிந்து சென்ற மனைவிக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்ததால் மனமுடைந்த வாலிபர் திருமண நாளான இன்று வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 27, 2024

நிபந்தனைகள் குறித்து ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ கருத்து

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து ராதாபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை இன்று தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு விதித்த நிபந்தனைகள் போல செந்தில் பாலாஜிக்கு விதிக்கவில்லை. எனவே அமைச்சராகலாம் என்பது தவறு என தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

நெல்லையில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை

image

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் 2014ஆம் ஆண்டு பொன்னுமணி, குருசாமி முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும், மீதம் உள்ள 5 நபருக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதித்தும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்தும், நெல்லை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.

News September 26, 2024

அரசு பொருட்காட்சி நாளை ஆரம்பம்; ஏற்பாடுகள் தயார்

image

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிர்புறம் உள்ள பிளாரன்ஸ் சுவேன்சன் மைதானத்தில் நாளை(செப்.27) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்கின்றனர் என்று ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(செப்.26) தெரிவித்தார்.

News September 26, 2024

அக்.18 அப்பாவு கட்டாயம் ஆஜராக வேண்டும்

image

அதிமுக பிரமுகர் ஆர்.எம்.பாபு முருகவேல் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று(செப்.26) எம்.பி. எம்.எல்.ஏ.க்கான சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் இந்த வழக்கு தொடர்பாக வருகின்ற அக்.18ஆம் தேதி ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!