India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் உள்ள குடோனில் இருந்து லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த இருந்த 12.5 டன் மதிப்புள்ள 300 மூட்டை ரேஷன் அரிசி இன்று (அக்.22) பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த சோஜி என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினம்தோறும் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் பணிபுரிய சிறப்பு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இரவு முழுவதும் காவலர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். அதன்படி இன்று (அக்.22) இரவு ரோந்து காவலர்கள் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று (அக்.22) மகளிர் உதவி எண் 181 அறிவிக்கப்பட்டுள்ளது. 24 x 7 மணி நேரமும் செயல்படும் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மகளிர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (அக்.22) விடுத்துள்ள அறிக்கையில்; தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வருகிற 5ம் தேதி காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டியும், 7ம் தேதி நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டியும் நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி – ஷாலிமர், தாம்பரம் – சந்திரகாசி என இரு வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில்கள் விரைவில் இயங்க உள்ளன. இதில் பொதுப் பெட்டிகளும் இருக்கும். திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் ரயிலால், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கும் இந்த ரயில் சேவை கிடைக்கப் பெறும். சென்னையில் இருந்து வடமாநிலங்கள் பயணிப்போருக்கு சந்திரகாசி ரயில் பயனுள்ளதாக இருக்கும்.
நெல்லையில் இன்று (அக்.22) 300 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை போலீசார் பிடித்துள்ளனர். பிடிப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரிசி கடத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேசன் அரிசி கடத்தல் குறித்து ஆங்காங்கே தீவிர சோதனை நடைபெற்று வருகின்றது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த தெற்கு வீரவநல்லூரில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை கேரள மாநிலம் திருத்துறை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் இந்த ஆலையில் இன்று (அக்.22) காலை 9 மணி முதல் இணை இயக்குனர் ஷாலினி தலைமையிலான எட்டு பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் தமிழகத்தில் உள்ள – நெல்லை மாவட்ட வீரருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. பாண்டிச்சேரி ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான சீனியர் பூம் சேதேக்வாண்டோ போட்டியில் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியை சேர்ந்த வீரர் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். தேசிய போட்டியில் 36 மாநிலங்களை சேர்ந்த 1608 வீரர்கள் கலந்துகொண்டனர்.
எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை காலி பணியிடங்களில் பணியமர்த்துவதை தவிர்த்து செவிலியர் பணிக்கான கல்வி தகுதியில்லாத நபர்களை கொண்டு நிரப்புவது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது பணியில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பல்லிக்கோட்டையை சேர்ந்த அதிமுக முன்னாள் கிளை செயலாளரான செல்லத்துரை(47), தற்போது ஊர் நாட்டாமையாக உள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுபாஷ், சின்ன ராஜா, பாலா ஆகிய 3 பேரை நேற்று முதல் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.