India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையப்பர் கோவிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளி தேர் ராஜீவ் காந்தி மரணத்தின் போது கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து புனரமைக்கும் பணியை தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் ஆய்வு செய்து 450 கிலோ வெள்ளி தேவைப்படுகிறது. முதற்கட்டமாக இதற்கு நேற்று(செப்.28) 100 கிலோ வெள்ளி கட்டிகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கி தொடங்கி வைத்தார். விரைவில் பணி முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகரித்து வந்த நிலையில், இன்று பிற்பகல் திடீரென பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 10 செ.மீ மழையும், ராதாபுரத்தில் 4 மி.மீ, திருநெல்வேலியில் 5 மி.மீ, அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி சரகத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அக்குற்றத்தில் ஈடுபட்ட 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜுவால் பாளையில் வைத்து செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் பேசுகையில், போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதில் கவனம் செலுத்த வேண்டும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஜாதி மோதல், போக்சோ பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய காலத்தில் சிறிய பிரச்சனைகள் பெரிதாக உருவாக வாய்ப்புள்ளது. எவ்வித பிரச்சனையாக இருந்தாலும் கவனமாக கையாள வேண்டும் என்றார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி நாங்குநேரி அருகே ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பகுதியில் ராணுவ அதிகாரிகளை பார்த்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். தகவல் அறிந்த விஜயநாராயணம் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் பதிவானது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அவரை இன்று அவரது குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தனர்.
மாதுடையார் குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் பெரியசாமி கடந்த 24ம் தேதி மது போதையில் ஒருவருடன் தகராறு செய்துள்ளார். இதை பார்த்த வேலு மகனை கண்டித்துள்ளார். இதையடுத்து தந்தை வேலுவுக்கு மகன் பெரியசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த பெரியசாமி கம்பை எடுத்து வேலுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வேலு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நெல்லையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வைகோ உடன் அவரது மகன் துரை வைகோ வருகை புரிந்தார். அவர் செய்தியாளரிடம் கூறுகையில், தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும் மெட்ரோ திட்டம் இரண்டிற்காக 22,000 கோடி செலவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்பு பூஜ்ஜியத்தில் உள்ளது. ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்றார்.
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் நேற்று நள்ளிரவு வரை பேராசிரியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்ட நடத்தினர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட பேராசிரியர் கல்லூரிக்கு வரக்கூடாது என்றும், கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவுப்படி நடக்க அறிவுறுத்தியதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் நேற்று(செப்.27) 103 பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதியம் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயில் காரணமாக குளிர் பானங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இளநீர், நுங்கு மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வெயிலால் பொதுமக்கள், மாணவிகள் குடைகளுடன் செல்வதை காண முடிந்தது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காங்., கட்சி சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை எம்.பி அலுவலகத்தில் இன்று(செப்.,28) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் மாவட்டத்தின் அனைத்து முக்கிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என எம்.பி. ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.