India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி வருகை தர உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை (ஜனவரி 27) காலை 9:30 மணி அளவில் கேடிசி நகர் மாதா மாளிகையில் வைத்து திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு தலைமையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நெல்லையில் புதிய பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவ வளாகத்திலேயே அவசர சிகிச்சை பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் / பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக வழங்க வசதியாக இந்த பிளாக் அமைக்கப்படுகிறது, பச்சை,மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த பிளாக் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு ஆண்கள் அணியும் ஒரு பெண்கள் அணியும் கலந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வரும் 30,31 ஆம் தேதிகளில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நெல்லை, தருவை PSN கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் சுயம்பு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருநெல்வேலி பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு புதிய ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது, பொதுமக்கள் டோக்கன் இல்லாமல் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். *ஷேர் செய்யுங்கள்

இன்று காலை 9 மணிக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து சூராணிக்கரை கோயில் வரை சாலையை அகலப்படுத்தி புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடக்கிறது. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பகல் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு பத்திர தீபத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

குடியரசு தினத்தன்று நெல்லை, தென்காசியில் 103 கடைகள் நிறுவனங்கள் 60 உணவு நிறுவனங்கள், 14மோட்டார் நிறுவனங்கள், 56 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 233 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 113 நிறுவனங்களில் பணியாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று தெரிவித்துள்ளார்.

கலியாவூரை சேர்ந்த சிவன் நாராயணன் (23) என்பவர் சீவலப்பேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்று வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் வேல்கனி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவையடுத்து சிவ நாராயணன் இன்று குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார். அப்பொழுது கூட்டணிக்கு ரெய்டு எல்லாம் விட வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினாலே போதும் என தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.