Tirunelveli

News March 28, 2025

நெல்லை மெட்ரோ திட்டத்திற்கு உகந்தது அல்ல

image

சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திருநெல்வேலி நகரம் உகந்ததாக இல்லை என, சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 28, 2025

நெல்லை: டவுன் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து

image

டவுன் நயினார்குளம் சாலையில் ஏராளமான ஒர்க் ஷாப்புகள் உள்ளன. இங்கு மந்திரம் என்பவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். நேற்று இரவு அவரது  ஒர்க் ஷாப்பில் திடீரென தீப்பிடித்தது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், தீப்பற்றி எரிய தொடக்கியது. இந்த தீ விபத்தில் கார் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பல் ஆகின. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் நிகழவில்லை. தகலறிந்த பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

News March 27, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன் படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.27] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் நிக்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

நெல்லை: நோய் தீர்க்கும் ஆலயம்

image

நெல்லை, உவரியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடலில் நீராடி வேண்டினால் நோய் தீரும் என்பது ஐதீகம். கல்யாணவரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இங்கு வேண்டினால் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணவும்*

News March 27, 2025

நெல்லையில் 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி

image

நெல்லை மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அதில் 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கான ஆணைகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.26) அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

News March 27, 2025

நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச்.29 சனிக்கிழமையாக அமைவதோடு மார்ச்.30,31 அரசு விடுமுறை என்பதால்  குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி நெல்லையில் மார்ச்.29 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

News March 27, 2025

கலைஞர் கைவினை திட்டத்தில் தொழில் கடன்

image

நெல்லையில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைஞர் கைவினை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வருவோர் புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

News March 27, 2025

நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச்.29 சனிக்கிழமையாக அமைவதோடு மார்ச்.30,31 அரசு விடுமுறை என்பதால்  குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி நெல்லையில் மார்ச்.29 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

News March 27, 2025

ரூ.75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி செய்த மூவர் கைது

image

திசையன்விளையை சேர்ந்த அந்தோணி செல்வம் (40) ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம்  ரியாஸ் (36), அய்யாதுரை (37), இசக்கி முத்து (28) ஆகியோர் ரூ.75 லட்சம் கொடுத்து 82,691 எண்ணிக்கையிலான அமெரிக்க டெதர் டாலர் கிரிப்டோ கரன்சியை ஆன்மூலம் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த ரூ.75 லட்சம் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 26, 2025

நெல்லை: உலகின் முதல் நடராஜர் சிலை

image

சுமார் 2000 வருட பாரம்பரியம் கொண்டது நெல்லையப்பர் செப்பறை நடராஜர் திருக்கோவில். இங்குள்ள சிலையே உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் தாமிர சபையாக இந்த கோவில் சிறப்பு பெற்றது. கூரைகள் செப்பு தகடுகளால் வேயப்பட்டதால் தாமிர சபை எனவும் அழைக்கப்படுகிறது. திருமணத்தடை குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிராத்திக்கலாம். *மற்றவர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!