India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பதிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் ஆன்லைன் விளையாட்டில் உங்களின் நேரத்தையும் பணத்தையும் இழக்காதீர்கள் என்றும்
நாளடைவில் இந்த பழக்கம் உங்களை அடிமையாக்கலாம்.
ஆகவே பொது மக்கள் விழிப்போடு செயல்பட்டு ஆன்லைன் விளையாட்டை தவிர்த்திடுவீர். என விழிப்புணர்வு பதிவிடப்பட்டுள்ளது

நெல்லை மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 6380079317 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <

நெல்லை மாநகரப் பகுதிகளில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவில், இன்று (பிப் -7) ம்தேதி முதல் 15 நாட்களுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிப்பதாக மாநகர காவல்துறை ஆணையாளர் சந்தோஷ் ஹாதி மணி ஆணை பிறப்பித்துள்ளார்.

நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், கட்டிடம், பீடி சுற்றும் பெண் தொழிலாளிகள், ஜவுளி ரக கடை நிறுவனங்களில் பணிக்கு தினமும் வந்து செல்லும் 61.74 கோடி பேர் இதுவரை மகளிர் இலவச பயணத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளதாக நெல்லை கோட்ட போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை அல்வா என்றால் உலகமெங்கும் பேமஸ், ஆனால், தற்போது ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கும் அல்வாதான் அதைவிட பேமஸ் என ஒன்றிய அரசை விமர்சித்து நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.நேற்றைய தினம் நெல்லை இருட்டுக்கடையில் முதல்வர் அல்வா வாங்கி சாப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
அதில் நாங்குநேரி அருகே 2,297 பரப்பளவில் புதிய தொழிற்பூங்கா, மதுரை – குமரி சாலையில் குலவாணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம், நெல்லை நகரில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும், மேலும் வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை, நெல்லையில் தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். மேலப்பாளைத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம், மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், முறப்பநாட்டில் பணிகள் தொடக்கம், மேலப்பாளையம், அம்பாசமூத்திரம் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசி வருகிறார். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நெல்லையின் அடையாளமாக திகழும் நெல்லையப்பர் கோவிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு ,தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது நமது கலைஞர் ஆட்சியில் தான். வரும் நவம்பர் மாதத்திற்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும் எனவும் முதல்வர் பேசியுள்ளார்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நெல்லை மாவட்ட அமைப்பின் சார்பில் நேற்று இரவு (பிப்-6) மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் வரும் 14. 02 .2025 வெள்ளிக்கிழமை மாலை ராதாபுரம் ,நாங்குநேரி, அம்பாசமுத்திரம், பாளை, திருநெல்வேலிஆகிய 5 இடங்களில் மாலை நேர கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் 25.02.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று (பிப்-6) விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை , தென்காசி மாவட்டங்களில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடுகள் கொண்ட 42 நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.