Tirunelveli

News November 2, 2024

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு – குளிக்கத் தடை

image

அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் மணிமுத்தாறு அருவி பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று (நவ.2) மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவிற்கு வரும் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு மட்டும் வனத்துறையினர் தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.

News November 2, 2024

மேலப்பாளையம் வீட்டை சேதப்படுத்திய 3 பேர் கைது

image

மேலப்பாளையம் வசந்தபுரத்தைச் சேர்ந்த பவானி தீபாவளி அன்று வீட்டின் வாசல் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது குமார் என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். இதனை பவானியின் கணவர் தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குமார் பவானியின் வீட்டை அடித்து சேதப்படுத்தி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

News November 2, 2024

போக்சோவில் கைதான போலீஸ் சஸ்பெண்ட் – எஸ்பி உத்தரவு

image

களக்காடு அருகே உள்ள சிதம்பர புரத்தைச் சேர்ந்த ஆனந்த கலைச்செல்வன் (35) ஏர்வாடி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் 17 வயது பிளஸ் டூ மாணவியரின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று (நவ.1)உத்தரவிட்டார்.

News November 2, 2024

நெல்லை சரகத்தில் 275 வழக்குகள் பதிவு

image

நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 142 வழக்குகளும், பொதுமக்களுக்கு இடையூறாக விதிகளை மீறி நடந்து கொண்டதாக 133 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நெல்லை டிஐஜி மூர்த்தி நேற்று (நவ.1) தெரிவித்துள்ளார்.

News November 1, 2024

மாவட்டத்தின் இன்றைய இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இன்று (நவம்பர் 1) இரவு ரோந்து காவலர்களின் விவரம், அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர உதவிக்கு இந்த காவலர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News November 1, 2024

தீபாவளி நெரிசலில் இடையூறு: 50 பேர் மீது வழக்கு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தைய நாளில் வணிக நிறுவனங்கள் உள்ள பஜார் மற்றும் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, மது குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வது போன்ற செயல்களுக்காக நெல்லை மாவட்டத்தில் 40 வழக்குகளும் மாநகரில் 10 வழக்குகளும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News November 1, 2024

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 28 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீபாவளி நாளில் மட்டும் ரூ.28 கோடியே 59 லட்சத்து 86 ஆயிரத்து 974 ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது. இந்த பணம் வங்கியில் இன்று (நவ.1) 11 மணிக்கு செலுத்தப்பட்டது என டாஸ்மாக் மண்டல மேலாளர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட சற்று கூடுதலாக மது விற்பனையானதாகவும் தெரிவித்தார்.

News November 1, 2024

நெல்லைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

image

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று (நவ.01) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2024

நெல்லை: 171 டிரைவர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

image

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2,033 டிரைவர், கண்டக்டர்கள், 75 டெக்னீசியன்களை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மதுரையில் 95, நெல்லையில் 171 டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் எம்.டி.சியில் 323 டிரைவர், கண்டக்டர், எஸ்.இ.டி.சியில் 318 டிரைவர், கண்டெக்டர்கள் நிரப்பப்படவுள்ளது.

News October 31, 2024

மாநகரின் இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) இரவு ரோந்து நியமனம் செய்யப்பட்ட காவலர்களின் பெயர் அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இரவு நேர உதவிக்கு பொதுமக்கள் இந்த காவலர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!