India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று(நவ.2) மாவட்ட முழுவதும் பரவலாக இரவு வரை மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்றும்(நவ.3) நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம். உங்கள் பில் நிலைப்பாடு (Bill Status) சரி பார்க்கவும். குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் உள்ள இணைய லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும் என நெல்லை மாவட்ட காவல்துறையினர் நேற்று(நவ.2) அறிவுறுத்தியுள்ளனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை(நவ.4) திறக்கப்படுகின்றன. விடுமுறைக்காக நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக இன்று(நவ.3) பிற்பகல் முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களிலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கான இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சிக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்க https://www.fisheries.tn.gov.in இணையதளத்தின் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து திருநெல்வேலி, ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ நவ.5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (பகிரவும்)
வயநாட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு வயநாட்டில் இன்று (நவ 2) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் பங்கேற்றனர்.
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பலர் சென்னைக்கு திரும்புகின்றனர். இதற்கான சிறப்பு ரயில்களில் இருக்கைகள் நிரம்பிவிட்டன. நாளை ஞாயிறு இரவு 7:15 மணிக்கு 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ‘MEMU’ ரயில் ஒன்று மதுரையிலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும். நெல்லை மக்கள் மதுரை வரை சென்று இந்த ரயிலில் சென்னைக்கு பயணிக்கலாம்.
நெல்லை மாவட்டத்தில் இன்று (நவம்பர் 2 ) மாலை 4 மணி வரை பெய்த மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 42.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராதாபுரம் வட்டாரத்தில் 21 மில்லி மீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 8 மில்லி மீட்டரும் சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி சர்வதேச அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வருகின்ற 10ம் தேதி அன்று 8 முதல்10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு “‘வேதி வினைகள்” என்ற தலைப்பில் பணிமனை காலை 10.30 முதல் மாலை 04.30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 8ம் தேதிக்கு முன்னதாக இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிகக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு தற்போது முதல் நாளை (நவ.03) காலை வரை ஆரஞ்சு் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் நடைபெற உள்ள 67 வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்லும் அவரை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அறையில் சபாநாயகர் அப்பாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.