India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று(நவ.,6) மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளையும் காலை முதல் தேவைக்கேற்ப பஸ் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சூரசம்காரம் பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் இன்றே திருச்செந்தூர் நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து படுகொலை செய்த வழக்கில் நெல்லை போக்சோ நீதிமன்றம் நேற்று(நவம்பர் 5) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கொலை செய்த குற்றவாளி குறிச்சிக்குளத்தை சேர்ந்த மாயாண்டிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை வருகின்ற 10ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் மூலம் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படலாம் என கருதப்படுகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதாரம் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் உள்பட சிறுபான்மையினர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகள் மூலம் பயனடையலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லை மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார்(18) என்ற பாலிடெக்னிக் மாணவர் நேற்று வீடு புகுந்து அருவாளால் வெட்டப்பட்டார். இது குறித்து பாளை., தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரும் நிலையில், 9 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்தார். தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்ய விரைந்துள்ளதாக கூறினார்.
பஹ்ரைன் நாட்டில் நெல்லையை சேர்ந்த 28 பேரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற நெல்லையை சேர்ந்த மீனவர்கள் 28 பேர் கடந்த செப்.,11 அன்று பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தண்டனை 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட முன்னெடுப்புகளுக்கு பிறகு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் துறையினர் பொதுமக்களுக்காக பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், இணையதளம் மோசடிகள் குறித்தும், சாலை விபத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவம்பர் 5) போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்து பாதுகாப்பாக இலக்கை அடையுங்கள் என புகைப்படத்துடன் விழிப்புணர் ஏற்படுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி முதல்வராக பணியாற்றிய லதா வேலூர் சட்டக் கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் பணியாற்றிய முனைவர் கயல்விழி புதிய முதல்வராக இன்று(நவ.,5) பொறுப்பேற்றார். அவருக்கு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் நேரில் சென்று வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் நலன் கருதி நெல்லை – தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில் தென்காசி மார்க்கமாக இயக்கப்பட்டது. 2 வழித்தடத்திலும் இந்த ரயில் தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் இயக்கப்பட்டது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. எனவே இந்த ரயிலை ஞாயிறுதோறும் தொடர்ந்து சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும் என இரு மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருநெல்வேலி மேலப்பாட்டத்தில் நேற்று மாலை 17 வயது சிறுவன் கொடூரமாக 10 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார். தொடர்ந்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.