Tirunelveli

News February 18, 2025

ரயில்களில் பொது பெட்டி எண்ணிக்கை மீண்டும் குறைப்பு

image

தெற்கு ரயில்வே முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களிலும் நான்கு முன் பதிவற்ற பெட்டிகள் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி நெல்லை வழியாக செல்லும் கன்னியாகுமரி – புதுச்சேரி எர்ணாகுளம் -வேளாங்கண்ணி ரயில்களில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்டதாகவும், இது தற்காலிகமானது என நேற்று தெரிவிக்கப்பட்டது.

News February 18, 2025

காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய கைதி மீட்பு

image

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மீனவர் காலனியை சேர்ந்த பெயிண்டர் ராஜா என்பவரை அடிதடி பிரச்சினைக்காக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையத்திலிருந்து அவர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அவரை மீண்டும் கைது செய்தனர்.

News February 18, 2025

உரிமை பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வலியுறுத்தல்

image

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் எம்சியூ 5 உள்ளிட்ட ரகங்களும் தனியார் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன .இந்த வகை பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 475 கிராம் பொட்டலம் ரூ.864 விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

News February 18, 2025

தபால் நிலையங்களில் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை தற்போது நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News February 17, 2025

தாதுமணல் கொள்ளை – ₹5,832 கோடி வசூலிக்க உத்தரவு

image

நெல்லை உட்பட தென் கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறி தாதுமணல் அள்ளிய புகார்களை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட 5,832 கோடி அபராதமும் செல்லும். இதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்தும் விசாரித்து, பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை அரசிடம் ஒப்படைக்கவும்,தாது மணல் நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரி துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவு

News February 17, 2025

வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நான்கு சக்கர வாகனத்திற்கு நம்பர் பதிவு செய்வதற்கு ரூ.20,000 லஞ்சம் கேட்டதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. இதனை அடுத்து ரூ.10000 லஞ்சத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெற்ற நிலையில் அவர் மீது இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 17, 2025

தாது மணல் கொள்ளை வழக்கில் என்று தீர்ப்பு

image

குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 2015-ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 2016 முதல் விசாரித்து வந்தது. வி.வி.மினரல், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட், பீச் சேண்ட் மைனிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

கருமேனியாற்று ஓடையில் மணல் திருடியவர் கைது

image

பரப்பாடி அருகே கழுவூர் பகுதியில் கருமேனியாற்று ஓடையில் மினி லாரியில் சென்று கணேசன் மகன் நாஞ்சில் சுந்தர் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டதாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். எஸ்ஐ உதய லட்சுமி மற்றும் போலீசார் தூத்துக்குடியில் வைத்து அவரை நேற்று கைது செய்தனர். நாஞ்சில் சுந்தர் மீது நாங்குநேரியில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News February 16, 2025

காங்கிரஸ் பிரமுகரிடம் சிபிசிஐடி விசாரணை

image

திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமாரின் மரண வழக்கு தொடர்பாக திருநெல்வேலி சிபிசிஐடி அலுவலகத்தில் காங்கிரஸ் பிரமுகர் குட்டம் சிவாஜி முத்துக்குமாரிடம் இரண்டரை மணி நேரம் நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் தனக்குத் தெரிந்த உண்மையான தகவல்களை கூறியுள்ளதாக சிவாஜி முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!