India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4 இரு சக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 8 வாகனங்கள் வருகிற 27ஆம் தேதி பெருமாள்புரம் பகுதியில் உள்ள குடிமை பொருள் அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இன்றும் நாளையும் வாகனங்களை பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

பரோடா வங்கியில் (Bank of Baroda) தேசிய அளவில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேசிய அளவில் மொத்தம் 4,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 223 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். 20-28 வயது உடையவர்கள் <

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நெல்லையில் மட்டும் 71 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <

நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (பிப்.23] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, நெல்லை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர் என்றும், அவசர உதவிக்கு எண் 100ஐ அழைக்கவும்தெரிவிக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த தேவர் குளத்தை சேர்ந்த வினோத் (21), வன்னிக்கோனேந்தல் வெனிஷ்குமார் (25), சந்திப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26 ), பொன்னுமணி ஆகிய நான்கு பேர் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 பேரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 14 புலிகள் இருப்பது தெரிய வந்ததாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா நேற்று ( பிப்.22 ) பாபநாசத்தில் தெரிவித்தார். வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால் தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் புலிகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்றதாக தெரிவித்தார்.

நெல்லை- கொல்லம் இடையே தென்காசி வழியாக மீட்டர்கேஜ் காலத்தில் பகல் நேர ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இரு மாநில ரயில் பயணிகளின் நலனை கருதி நெல்லை- கொல்லம் இடையே தென்காசி வழியாக 3 ஜோடி ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று கூறுகையில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தனித்திறமை நிறைந்துள்ளது. அதை மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக கற்றுக்கொண்டு, உங்களுக்கு பிடித்தமான பாடத்தைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். உயர் கல்வி பெற தேவையான வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது என்றார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ( பொ) மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997ன் படி நேற்று ( பிப்.22 ) முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நெல்லை மாநகரில் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா போன்றவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (பிப்.21] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர் அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.