India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில் நேற்று(நவ.21) சற்று மழை ஓய்ந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பொழிந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நெல்லையில் அதிகபட்சம் ராதாபுரம் பகுதியில் 13 மில்லி மழை மூலைக்கரைப்பட்டியில் 10 மில்லி மீட்டர் கொடுமுடியாறில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொது சுகாதார துறையின் மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் தொடங்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய மருந்து சேவைகள் ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 5.14 இலட்சம் பேர் பயனடைந்தனர் என மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்தது.
நெல்லை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. நேற்று காலை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவானது. குறிப்பாக பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்று(நவ.22) நெல்லை மாவட்டத்துக்கு எந்த அலார்ட்டும் கொடுக்கப்படவில்லை. எனவே மழை பெய்ய வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள டி. ஃபார்ம் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இருந்த நிலையில் நேற்று(நவ.21) நவ.30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசத்தை நீட்டித்துஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று(நவ.21) வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலேயே அதிகமான மழையாக நெல்லை மாவட்டம் நாலூமுக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. அதாவது ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை மொத்தமாக 1,112 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினைவிட்டுக் கொடுப்பது தொடர்பாக உணவுத்துறையின் www.tnpds.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவோ அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பித்து குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு காவல் உதவி தேவைப்பட்டால் அவர்களின் தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்கள் விற்பனை குறித்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலி டவுனில் உள்ள மீனாட்சிபுரம் முனிசிபல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (நவம்பர் 21) மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ராதாபுரம் பகுதியில் 13 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 8 மில்லி மீட்டரும் மொத்தத்தில் 50.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் ஆர்வம் மிகுதியால் அதற்கான whatsapp குழு ஒன்றில் இணைந்துள்ளார். அது போரக்ஸ் டிரேடிங் என நினைத்து தனது சேமிப்பு பணம் 60 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். பணத்தைத் திரும்ப பெற முயன்ற போது எடுக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து நெல்லை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.