India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(நவ.22) நடந்தது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசும்போது, நெல்லை மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 37,144 பயனாளிகளுக்கு பி.எம். கிசான் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.22) நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம்: இன்று காலை 10:30 மணிக்கு அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பகல் 11 மணிக்கு திருப்படை மருதூரில் கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்கும் முகாம் என்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்களில் நடைபெறுகிறது.
மின்தடம் மாற்றியமைக்கும் பணிக்காக திருச்செந்தூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – நெல்லை ரயில் (06676) அக்.15ஆம் தேதி முதல் நவ.22ஆம் தேதி வரை, திங்கட்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ரத்து செய்யப்பட்டது. இந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்ததால், இன்று (நவ.23) சனிக்கிழமை முதல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மார்கழி மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பக்தர்கள் சேவை பஸ் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் டிசம்பர் 22, 29 ஜனவரி 5, 12 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். இதற்கு பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயண கட்டணம் ரூ.600 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நாளை 23ஆம் தேதியும் நாளை மறு தினம் 24ஆம் தேதியும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் வாக்காளர்கள் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலப்பாளையத்தில் அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகளை வீசிய 2 பேர் மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அமரன் திரைப்படத்தில் காட்சிகள் இருப்பதால் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து தேடி வந்தனர். அதில் மேலப்பாளையம் ஆசுரான் மேல தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி, பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இன்று (நவ.22) நடைபெற்ற நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது: அக்டோபர் மாதத்தில் 64.73 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவில் விட 61% குறைவாகும். நடப்பு நவம்பர் மாதத்தில் 20ஆம் தேதி வரை 146.25 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று (நவ.22) நெல்லை வந்தார். கூட்டம் முடிந்த பிறகு பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனை வேலுமணி சந்தித்து தனது இல்ல திருமண அழைப்பிதழை வழங்கினார். பாஜக எம்எல்ஏவை அதிமுக மூத்த நிர்வாகி சந்தித்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி மாவட்ட 24வது மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நெல்லை சந்திப்பு வானவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநகர மாவட்ட பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளையும் தெரு நாய்களையும் கட்டுப்படுத்துவது முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று (நவ.22) கேட்டுக்கொள்ளப்பட்டது.
Sorry, no posts matched your criteria.