India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேவைக்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. 12ம் தேதி மாலை சிறப்பு பஸ்கள் புறப்பட்டு 14ஆம் தேதி இரவு மீண்டும் திரும்ப வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மேலும் 935 மெட்ரிக் டன் உரமூட்டை இன்று(டிச.02) ரயில் மூலம் கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் நெல்லைக்கு வந்தது. அங்கிருந்து லாரிகளில் எடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்க கொண்டு செல்லப்பட்டது. உரங்கள் தட்டுப்பாடு என்று கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நெல்லை – நாகர்கோவில் பயணிகள் (பாசஞ்சர்) ரயில் இன்று(டிச.02) முதல் அடுத்த 6 மாதங்களுக்கு கன்னியாகுமரி வரை இயக்கப்படவுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்க பணிகள் இன்று தொடங்க உள்ளதால் அங்கு நிறுத்தப்படும் ரயில்களை குமரி வரை நீட்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் 6 மாதங்களுக்கு குமரிமுனை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெஞ்சல் புயல் மழை எதிரொலியாக விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலம் எண் 452 ல் வெள்ளநீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுவதால் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 20666 இன்று(டிச.02) காலை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் 20627, ரத்து செய்யப்பட்டுள்ளது.
குமரியை சேர்ந்த சிபு ஆண்டனிக்கு, நெல்லை ராதாபுரம் அருகே கைலாசபேரியில் 60 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை விற்பது தொடர்பான பிரச்னையில், டான்போஸ்கோ என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிபு ஆண்டனியை கடத்தி மிரட்டி 30 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபு ஆண்டனி அளித்த புகாரின்பேரில், அதிமுக பிரமுகர் சுப்பிரமணி & டான் போஸ்கோ ஆகியோரை போலீசார் நேற்று(டிச.,1) கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் நேருவை ஆன்லைன் செயலி மூலமாக சில வாலிபர்கள் தொடர்பு கொண்டு நெல்லை வண்ணார்பேட்டைக்கு அழைத்து வந்து ஒரு அறையில் அடைத்து வைத்து ரூ.1 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து நேரு பாளை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பணம் பறித்த கும்பலில் 5 பேரை இன்று கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டாரம் பள்ளமடை, பள்ளிக்கோட்டை, பிள்ளையார் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூ விளைச்சல் மேற்கொள்கின்றனர். கடந்த வாரம் முகூர்த்தம் காரணமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1500 வரை விலை போனது. இந்நிலையில் மொத்த விற்பனை சந்தைகளில் இன்று ஒரு கிலோ மல்லிகை ரூ.800 விற்பனையானது. இதுபோல் பிச்சிபூ விலை ஒரு கிலோ ரூ.500 க்கு விற்கப்பட்டது.
நெல்லையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாள்தோறும் மாவட்டம் முழுவதும் பதிவாகும் மழை அளவு விபரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களாக மழை குறைந்தாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று(நவ.30) மாவட்ட முழுவதும் ஒரு இடத்தில் கூட மழை பெய்யாததால் இன்று(டிச.01) வெளியிடப்பட்ட மழை அளவு விபரத்தில் அனைத்து பகுதிகளிலும் பூஜ்ஜியம் காட்டப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(நவ.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-ஃபார்ம் டி-ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் உடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க நேற்று(நவ.30) கடைசி நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், டிச.05ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண்:06012/06013) மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு இதற்கான முன்பதிவு தொடங்குகிறது.வள்ளியூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக இந்த ரயில் செல்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ள நிலையில், இந்த ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.