Tirunelveli

News December 4, 2024

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை

image

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் உலகநாதன்(40).  இவர் இன்று அரிகேசநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை சரமரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக  கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

News December 4, 2024

காதலை கைவிட மறுத்ததால் கொன்றேன் என வாக்குமூலம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை பகுதியை சேர்ந்த விஜயகுமார்(25) என்பவர் பாளையில் உள்ள தனது காதலியை பார்க்க வந்தபோது அவரது சகோதரர் புஷ்பராஜ் சிம்சன் தனது நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொன்றார். கைதான புஷ்பராஜ் சிம்சன் போலீசிடம் அளித்த வாக்கு மூலத்தில், என் தங்கை மீதான காதலை கைவிட மறுத்ததால் அவரை ஊருக்கு வரவழைத்து வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

நெல்லையில் தேமுதிக நிர்வாகிகள் நீக்கம் – பிரேமலதா

image

நெல்லை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசேகர பாண்டியன் ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News December 4, 2024

மருத்துவ சேவையால் வாழ்நாள் அதிகரிப்பு: நெல்லை GH டீன்

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேற்று கூறுகையில், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காணப்படும் தயக்கத்தையும் அறியாமையையும் அகற்ற ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய கருத்தை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கும் முழுமையான எச்ஐவி சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவ சேவையால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

News December 4, 2024

காதலை கைவிட மறுத்ததால் கொன்றேன்: கொலையாளி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை பகுதியை சேர்ந்த விஜயகுமார்(25) என்பவர் பாளையில் உள்ள தனது காதலியை பார்க்க வந்தபோது அவரது சகோதரர் புஷ்பராஜ் சிம்சன் தனது நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொன்றார். கைதான புஷ்பராஜ் சிம்சன் போலீசிடம் அளித்த வாக்கு மூலத்தில், என் தங்கை மீதான காதலை கைவிட மறுத்ததால் அவரை ஊருக்கு வரவழைத்து வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

நெல்லை மாவட்டத்தில் 5 பிடிஓ-க்கள் இடமாறுதல்

image

நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 5 பிடிஓ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ விடுப்பில் உள்ள ராஜம் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த முத்தையா நாங்குநேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜேஷ்வரன் மானூருக்கும், உமா களக்காட்டிற்கும், கண்ணன் அம்பைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

News December 4, 2024

திருநெல்வேலியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்

image

#திருநெல்வேலியில் இன்று(நவம்பர் 4) நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காலை 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.#காலை 10.30 மணிக்கு நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையர் தலைவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.

News December 4, 2024

மேலப்பாளையம் SSI விபத்தில் உயிரிழப்பு!

image

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து. தற்போது உதவி ஆய்வாளராக பயிற்சியில் இருந்த முத்து, இன்று(டிச.,4) காலை நாகர்கோவில் நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் படுகாயத்துடன் பாளை., அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News December 4, 2024

ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்த மா.செ. அழைப்பு

image

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி வருகின்ற 5ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் அதிமுகவினர் அனைவரும் கலந்துகொள்ள நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று(டிச.,3) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 3, 2024

தயார் நிலையில் மணல் மூடைகள்

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. 2 நாட்கள் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழையும் பெய்தது. நேற்றும் இன்றும் மழை பெய்யவில்லை. மழைக்காலங்களில் குளம் மற்றும் குட்டைகளில், கரையில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு கரையை அடைக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் மணல் மூடைகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அடுக்கி வைத்துள்ளது.

error: Content is protected !!