India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் திரைப்பட நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்-க்கும் நெல்லை மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இவர்களது திருமணம் ஜப்பான் நாட்டில் நேற்று(நவ.,7) மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி ஃபார்ம், டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவ.,20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நெல்லை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று (நவ.,8) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் நாளை(நவ.,9) நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்று சுழற்சி மேற்கு திசையில் நகர்வதால் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் வெளியில் செல்வோர் இதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை வகுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணிபுரிந்த பல்வீர் சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது குறித்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றும்(நவ.,7) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பல்வீர் சிங் ஆஜராகவில்லை. தொடர்ந்து 3ஆவது முறையாக அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நெல்லை மாவட்டம் ஜோதிபுரம் கிராமத்தில் களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கு தடை விதிக்க உத்தரவிட கோரிய வழக்கில், சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை நகராட்சியின் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 12 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் முருகேசன் நேற்று வேலையை முடித்துவிட்டு கங்கைகொண்டான் 4 வழி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசனை பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக இன்று (நவ.7) இரவு 10.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை எக்மோர் சென்ட்ரல் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சூரசம்ஹாரம் பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்ப அவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மழை அளவு வெகுவாக குறைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சில இடங்களில் குறைந்த அளவு மழை பதிவானது. இந்த நிலையில் வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (நவ.7) விடுத்துள்ள வானிலை பதிவில் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று திருச்செந்தூர் வருகிறார். தற்போது மதுரையில் இருக்கும் அவர் நேரடியாக திருச்செந்தூர் வருகை தந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் பிற உயரதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
Sorry, no posts matched your criteria.