India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடியையை சேர்ந்த தொழிலாளி வின்சென்ட். போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருந்து வரும் ராமகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் மருத்துவ சோதனைக்கு பின் அவர்கள் இன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2 நாட்கள் பெய்து வரும் மழையால் தென் மாவட்டங்களில் இன்று வெப்பநிலை குறைந்துள்ளது. வெப்பநிலை அதிகரிக்காததால் இன்று தென்தமிழக மாவட்டங்களில் மழையும் குறைந்துள்ளது. இன்று ஏப்ரல் 6 பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால்இன்று மாலை, இரவு நேரங்களில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் “பாதுகாப்பு அதிகாரி” பணிக்கு ரூபாய் 15,000 முதல் 25,000 சம்பளம் வரை வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த வேலைக்கு போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <

மானூர் மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த காளிதாஸ் கருப்பசாமி மாரியப்பன் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4,05,000 பணத்தை மோசடியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த பிரேம்குமார் தம்பதியை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.

மேலப்பாளையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை தொடர்பாக காதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் நீதிபதி பத்மநாதன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள விவி மினரல்ஸ் தாது மணல் ஆலைகள் மற்றும் அதன் தலைமை அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஐகோர்ட் உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 48% ஆக குறைந்துள்ளது. கடந்த 3 மாதத்தில், விபத்தில் 48 பேர் மரணம் அடைந்தனர். 178 பேர் காயமடைந்தனர். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 92 பேர் விபத்தில் உயிரிழந்தனர். 189 பேர் காயமடைந்தனர். தொடர் விழிப்புணர்வு காரணமாக விபத்துக்கள் குறைந்துள்ளன என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் கோயம்புத்தூர் திருப்பூர் வழியாக பிலாஸ்பூர் செல்கிறது. சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13, 20-ம் தேதிகளில் நெல்லையிலிருந்து அதிகாலை புறப்படும் இந்த ரயில் போத்தனூர், இருகூர் வழியாக செல்கிறது. கோயம்புத்தூர் நிறுத்தம் கிடையாது. அதற்கு பதிலாக போத்தனூர் நிறுத்தம் உண்டு என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மாணவி ஒருவர் நேற்று (ஏப்ரல்-4) பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு 4 பக்க புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் மீது மாணவி பாலியல் புகார் கொடுத்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (ஏப்ரல் 5) காலை 10 மணியளவில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகை தர உள்ளார். எனவே, கட்சியினர் அனைவரும் சுற்றுலா மாளிகைக்கு வருகை தர திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.