India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பள்ளி மாணவ- மாணவிகள் கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மின்னணுவியல் என்ற பிரிவு 8-9மாணவ மாணவிகளுக்ககவும். STEM Activity என்ற பிரிவில் 5-8 மாணவ- மாணவிகளுக்கும் நெல்லை அறிவியல் மையத்தில் நடக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி சிறுமி ஒருவரிடம் அவரது நிர்வாண படம் கேட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் கல்லூரி மாணவர் ஒருவர்14 வயது நெல்லை சிறுமியை காதலிப்பதாக கூறி செல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் அவரது நிர்வாணப் படத்தை அனுப்பக் கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்தாராம். இதனை அடுத்து நேற்று (ஏப்9)சேரன்மகாதேவி போலீசார் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <

மானூர் அருகே நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள பழமையான கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கடந்த 3-ம் தேதி கட்டிட தொழிலாளியாக பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர் சுமார் 12 அடி உயரமுள்ள கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்-09) உயிரிழந்தார். மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் அம்பை, கல்லிடைக்குறிச்சி , பாவூர்சத்திரம் , தென்காசி ,கடையநல்லூர் , சங்கரன்கோவில் ,ராஜபாளையம் , சிவகாசி ,விருதுநகர் , மதுரை , திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி , வழியாக இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிறன்று நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டு செல்கிறது. தற்போது இந்த சிறப்பு ரயில் மே மாதம் முதல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் (ஏப்ரல் 9) தமிழ்நாட்டில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பொதுமக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைவாக முடிப்பது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலக விளம்பர வாகத்தின் மூலம் சமரச தின விழிப்புணர்வு பிரச்சாரத்தினை முதன்மை மாவட்ட நீதிபதி/மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாய்சரவணன் மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நெல்லை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஞானதிரவியம், மறைந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடனிருந்தார்.

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 10.04.2025 (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.04.2025) மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெஃபரின் கிரேசியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (ஏப்.9) காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணை நீர் இருப்பு 88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 91 கன அடி நீர் வருகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 103.48 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 285 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு நீர் இருப்பு 9 அடியாக உள்ளது. நம்பியார் நீர் இருப்பு 13 அடியாகவும் கொடுமுடியாறு நீர் இருப்பு 14 அடியாகவும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.