India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்: காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. மாஞ்சோலையில் இன்று(டிச.16) காலை 9 மணி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. பாப்பாக்குடி சுப்பிரமணியபுரத்தில் பகல் 11:30 மணி முதல் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.
நெல்லையில் கடந்த 3 நாட்கள் கனமழைக்கு பிறகு, இன்று(டிச.16) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் சில முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. அதில், பள்ளிகளில் மழைநீர் தேக்கம் குறித்த ஆய்வு பிறகே பள்ளியை தொடங்க வேண்டும், தண்ணீர் தேங்கி இருந்தால் முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கலாம், மழைநீர் தேக்கம் இருந்தால் தலைமையாசிரியர் விடுமுறை அறிவிக்கலாம் என ஆட்சியர் உத்தரவு
நெல்லையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது பரவலாக கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பாபநாசம் அணைக்கு இன்று (டிச.15) இரவு 9 மணி நிலவரப்படி 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாமானது நாளை (டிச.16) அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, பாளையங்கோட்டை, நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ளது.
நெல்லையில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று (டிச.15) வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலேயே அதிகமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்துப்பகுதியில் 2016 மில்லி மீட்டர் மழை பதிவாகி முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாலுமுக்கு பகுதியில் 1812 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது.
நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (டிச.15) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மாவட்டத்தில் மழைப்பொழிவு முற்றிலும் நின்றுள்ள நிலையில் நாளை பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட உள்ளன. முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்த பின்பே மாணவர்களை அனுமதிக்க வேண்டும். பள்ளிகளில் நீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ பள்ளிக்கு விடுமுறை அளிக்க தொடர்புடைய தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.15) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.
சேரன்மகாதேவி ஒன்றியம் தெற்கு அரியநாயகிபுரம் கன்னடியன் கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் பலத்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் இன்று (டிச.15) நெல்லை தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றில் உறை கிணறு மற்றும் மின் மோட்டார்கள், பைப்புகள் வயர்கள் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் சிறப்பு குழுக்கள் மூலம் நடைபெற்று வருகிறது. படிப்படியாக குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 9786566111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர் வட்டார ரயில் பயணிகள் பலனடையும் வகையில் நெல்லை – ஷாலிமார் இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் வள்ளியூர் மார்க்கமாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோல் மதுரை கன்னியாகுமரி இடையே நெல்லை வழியாக மெமு ரயில்களை இயக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.