Tirunelveli

News February 11, 2026

திருநெல்வேலி நாளைய மின்தடை பகுதிகள்

image

நாளை (பிப்.12) (9AM -2PM) மின்தடை. நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான் குளம், கோடா விளை, மரக்காட்டு விளை, செம்பொன் விளை, காளி குமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம், மன்னார் புரம், வடக்கு விஜய நாராயண், தெற்கு விஜய நாராயண், இட்டமொழி, நம்பி குறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி *SHARE* பிற மின்தடை பகுதிகளை காண <<19108059>>CLICK<<>>

News February 11, 2026

நெல்லை: திருமணம் ஆகவில்லையா? – இங்க போங்க

image

நெல்லை மாவட்டம், சிங்கிகுளம் சமண மலையில் சப்த கன்னியர், சப்தரிஷி ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் ஆகாத ஆண்கள் சப்த கன்னியையும், பெண்கள் சப்தரிஷியையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். ஆகவே திருமணம் தள்ளிப் போகுதே என கவலைப்படாமல் சிங்கிகுளம் சமண மலையில் உள்ள சப்தரிஷியை பெண்களும், சப்த கன்னியரை ஆண்களும் சென்று வணங்குங்கள் விரைவில் திருமணம் நடக்கும். *மற்றவர்களுக்கும் பகிரவும்*

News February 11, 2026

நெல்லை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு சிறை

image

நெல்லை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு சுப்பிரமணியன் (72) என்பவர் 5 மற்றும் 6 வயதுடைய 2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்தார்.

News February 11, 2026

திருநெல்வேலி: Whatsapp மூலம் ரூ.15 லட்சம் மோசடி!

image

பாளை பெருமாள்புரத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் அனல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது வாட்ஸ்ஆப்-ல் மர்ம நபர் டிஜிட்டல் அரெஸ்ட் என பேசி ரூ.15 லட்சத்தை பறித்தார். இது குறித்து நெல்லை சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த்தா(26) அவரது தந்தை சீனிவாசன்(65), சாய் கிரண்(36) ஆகியோரை நேற்று கைது செய்தனர். *Awareness* ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவுநேர ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தில் ஹென்றி அமலதாஸ், நாங்குநேரி உட்கோட்டத்தில் சுப்பிரமணியன், வள்ளியூர் உட்கோட்டத்தில் ராஜாராம், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் வேல்ராஜ், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் சண்முகவேல் ஆகிய காவல் ஆய்வாளர்கள், இன்று (பிப்.8) இரவுநேர ரோந்து பணிகளில் ஈடுபடுவர்.

News February 10, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.6) இரவு ரோந்து பணிகளில் இளவரசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News February 10, 2026

நெல்லை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 10, 2026

நெல்லை: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News February 10, 2026

நெல்லையில் அரசு ஊழியர்கள் 153 பேர் திடீர் கைது

image

நெல்லையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 09 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாவட்டத் தலைவர் சுப்பு தலைமையில் இன்று வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் கீழ்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 153 நபர்கள் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

News February 10, 2026

நெல்லை: Driving licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!