Tirunelveli

News December 18, 2024

கேரள கழிவு விவகாரம்: முன்னாள் MLA இன்பதுரை சாடல்

image

ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இன்று(டிச.,17) ‘X’ தளத்தில் செய்தி ஒன்று பகிர்ந்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, நமது கனிமங்களை கேரளாவுக்கு கடத்தி சென்று கொட்டுவதும், பதிலுக்கு கேரளாவிலிருந்து மருத்துவ, இறைச்சி கழிவுகளை நெல்லை மாவட்டத்திற்குள் தடையின்றி கொண்டு வந்து கொட்டுவதுமாக கொட்டமடிக்கும் விஷ கிருமிகளை அடக்காமல் அரசு கும்மி கொட்டுது. இவ்வாறு அரசை சாடியுள்ளார்.

News December 18, 2024

நெல்லையில் கேரள கழிவுகள்: குற்றவியல் நடவடிக்கை

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(டிசம்பர் 17) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் இருந்து கொட்டப்படும் கழிவுகள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

News December 17, 2024

அகஸ்தியர் அருவிக்கு செல்ல நாளை முதல் அனுமதி

image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள அகஸ்தியர் அருவி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.தற்போது வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்து நாளை (டிச.18) முதல் சுற்றுலா பயணிகளை வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளனர். 

News December 17, 2024

நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை

image

பாளை சாந்தி நகர் பெல் காலனியைச் சேர்ந்த செல்வம் சுந்தர் ராவ் வ.உ.சி மைதானம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் ஊழியர்கள் வந்து போது கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பாளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 17, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் 

image

டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 20 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளன. எனவே விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பலன் அடையலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதில் வழக்குப் பதிவு

image

கோடகநல்லூர் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக BNS 271,272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 17, 2024

நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுக்கு அண்ணாமலை கண்டனம்

image

நெல்லை மாநகர நடுக்கல்லூர் காட்டுப்பகுதியில் நேற்று கேரளா மாநிலத்தின் மருந்து கழிவுகளை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கண்டனத்தை தெரிவித்து, இனியும் இதேபோன்று நிகழ்வு தொடர்ந்தால் குப்பைகளோடு கேரளா செல்வேன் என தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

கேரள கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அரசு அதிகாரிகள் அதிரடி ஆய்வு

image

நெல்லை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள நடுக்கல்லூர் காட்டுப்பகுதியில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை இன்று(டிச.17) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி ஊரக பஞ்சாயத்து உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

News December 16, 2024

அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை ஏற்காதீர்கள்

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் Facebook இல் அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை ஏற்கும் முன் யோசித்து செயல்படுங்கள். மேலும் ஜாக்கிரதையாக ஆன்லைன் நட்பை உருவாக்குங்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிள்ளது.

News December 16, 2024

நாடு திரும்பும் 28 நெல்லை மீனவர்கள் 

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் துபாய் கடலில் மீன் பிடித்த போது பக்ரைன் கடற்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் வேண்டுகோள் இணங்க அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நாளை இரவு அவர்கள் நாடு திரும்புவார்கள் என எம்பி ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!