India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அரங்கில் நேற்று ஏப்ரல் 18 நடைபெற்ற மாபெரும் மரக்கன்று நடும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசரும் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு உறுப்பினருமான தண்டபாணி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினர். அப்போது அவர், “பொதுமக்கள் எந்த நேரமும் சட்டப்பணிகள் ஆணையக் குழுவை அணுகலாம். உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். சட்ட ரீதியான உதவிகள் செய்ய ஆணைக் குழு தயாரக உள்ளது” என்றார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.

நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வழக்கு விசாரணை இன்று (ஏப்.17) நடைபெற்றது. இதில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டார். காலையில் தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது.

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தலைமையகம் மற்றும் 17 கிளைகளில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடன் மேளா நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி கொக்கரகுளம் ரோஸ் மஹாலில், 22 ஆம் தேதி வள்ளியூர் எம் எஸ் மகாலில், 24 ஆம் தேதி அம்பை அரோமா பள்ளியில் நடக்கிறது.

விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்(06089) சென்னையிலிருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில்(06090) 18ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு அதற்கு மறுநாள் காலை சென்னை வந்தடையும்

நெல்லை ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மாற்றுத்திறனாளிகளுக்காக மே 29,30 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை ஏப்.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94999 33236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்

திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் (ஏப்ரல் 16) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.