India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (டிச.19) கூறுகையில்; திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தான் முதல் முறையாக இவ்வளவு கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்பேரில் இரவு நேர பொதுமக்களின் உதவிக்காக இன்று (டிச.19) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இரவு நேர உதவிக்கு பொதுமக்கள் இந்த காவலர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை (டிச.20) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. பாளையங்கோட்டை பெருமாள்புரம் சிதம்பரம் நகர் பகுதியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்று பலன் அடையலாம் என உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 24 வாகனங்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் நாளை(டிச.20) காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இன்று மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லையில் புறநகர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தலைமை ஏஜெண்டாக செயல்பட்ட சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 24 வாகனங்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் நாளை(டிச.20) காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இன்று மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12, 13 ஆகிய இரு தினங்களில் இடைவிடாது தொடர் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இன்று(டிச.19) காலை மழை அளவு குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் மணிமுத்தாறில் 0.20 அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநிலம் மருத்துவ கழிவுகளை நெல்லை மாநகர நடுக்கல்லூர் பகுதியில் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அண்டை மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்க கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார் என மு.க ஸ்டாலினை குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை சுத்தமல்லி அருகே கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அந்த சம்பவம் குறித்த முழு தகவல்களையும் சேகரிப்பதற்காக கேரள மாநில பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இன்று(டிச.19) நடுக்கல்லூர் பழுவூர் கொண்டாநகரம் பகுதிகளுக்கு நேரில் வருகிறார்கள். மேலும் இன்று அந்த கழிவுகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்ட சைபர் கிரைம் நேற்று(டிச.17) விடுத்துள்ள அறிக்கையில், இணையதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் UPI REQUEST MONEY FRAUD பண மோசடி அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரியாமல் உங்களுக்கு பணத்தை மாற்றி அனுப்பிவிட்டதாக கூறுவார்கள். இதை பொருட்படுத்த வேண்டாம் என கூறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.